விஜய் ஆண்டனி நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘வள்ளி மயில்.’ இந்த படத்தில் விஜய் ஆண்டனியோடு இயக்குநர் பாரதிராஜா, சத்யராஜ், புஷ்பா படப்புகழ் சுனில், ஜி.பி. முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
1980 காலகட்டத்து நாடகக் கலைஞர்களின் வாழ்க்கைப் பின்னணியில் நடக்கும் புதுமையான திரில்லராக இந்த படம் உருவாகிறது.
கதை நடக்கும் காலகட்டம் 1980களில் என்பதால் முன்னதாக திண்டுக்கல் மாநகரில் அந்த காலகட்டத்தை கண் முன் கொண்டு வரும் வகையில் ஒரு கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது.
தற்போது சிறுமலையின் காட்டுப்பகுதியில் ஒரு பழமையான கோவில் தத்ரூபமாக அமைக்கப்பட்டு, படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. மும்பையைச் சேர்ந்த 50 ஸ்டண்ட் கலைஞர்களுடன் விஜய் ஆண்டனி, நாயகி பரியா அப்துல்லா சண்டைக்காட்சியில் பங்கு கொண்டு நடித்தனர்!
படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.
இசை – டி இமான்
ஒளிப்பதிவு – விஜய் சக்ரவர்த்தி
எடிட்டர் – ஆண்டனி,
கலை இயக்கம் – உதயகுமார்,
ஸ்டண்ட் – மாஸ்டர் ராஜசேகர்
மக்கள் தொடர்பு – சதீஷ் AIM