திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் (MSDE) கீழ் இயங்கும், எல்எஸ்எஸ்சி (LSSC) எனப்படும் தோல் துறை திறன் கவுன்சில், ‘ஸ்கேல் (Scale) ஸ்டுடியோ ஆண்ட்ராய்டு செயலி‘யை நடைமுறைக்கு கொண்டுவருகிறது.
இந்த செயலி (App) நீங்களே செய்யுங்கள்’ என்ற அடிப்படையில் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஆன்லைனில் வழங்குவதற்கான தளமாக செயல்படும்.
கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், வெவ்வேறு பணிகளில் உள்ளோர் என ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் லெதர் எனப்படும் தோல் பொருட்களை மூலப்பொருளாகக் கொண்டு காலணி மற்றும் ஃபேஷன் தயாரிப்பு கலையைக் கற்கலாம்.
கற்றவர்களை தோல் துறை திறன் கவுன்சில் மதிப்பீடு செய்து சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த செயலியை சென்னை சி.எல்.ஆர்.ஐ. வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.நிகழ்வில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், எல்எஸ்எஸ்சி தலைவர் பி.ஆர்.அகீல் அகமது, சி.எல்.ஆர்.ஐ. இயக்குநர் டாக்டர்.கே.ஜே.ஸ்ரீராம், CLRI ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் ஹபீப் ஹுசைன், எல்எஸ்எஸ்சி முதன்மை செயல் அதிகாரி தலைவர் மற்றும் திரு. ராஜேஷ் ரத்னம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியை எல்எஸ்எஸ்சி நிர்வாகம் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது.
செயலி குறித்த கூடுதல் தகவல்கள்:-
இந்த ஆன்லைன் லைவ் ஸ்டுடியோ, கருத்துருவாக்கம், வடிவமைப்பு, மேம்பாடு, முன்மாதிரி மற்றும் பாதணிகள் மற்றும் ஃபேஷன் தயாரிப்புகளை உருவாக்க கற்றுக்கொள்வதற்கான நவீன வசதியாகும். 360 டிகிரி அதிவேக கற்றல் அனுபவத்திற்காக அமைக்கப்பட்ட மல்டி-கேம் மூலம் வகுப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
ஸ்கேல் இந்தியா ஆண்ட்ராய்டு செயலி மூலம் டிசைன் ஸ்டுடியோவில் உள்நுழைந்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், இல்லத்தரசிகள், பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் போன்ற ஆர்வமுள்ள கற்பவர்கள் காலணி மற்றும் ஃபேஷன் தயாரிப்புகளை உருவாக்கும் கலையை கற்றுக்கொள்ளலாம்.
இந்த ஸ்டுடியோ 24 மணி நோமும் செயல்பட்டு தொழில்துறையைச் சேர்ந்த நிபுணர்களால் பல்வேறு அமர்வுகளை நடத்துகிறது.
டூ இட் யுவர் செல்ஃப் (DIY), டைரக்ட் டு வாடிக்கையாளர் (D2C) மற்றும் பெஸ்போக் துறைகள் வளர்ந்து வருகின்றன. அந்த வகையில் இது பிரத்தியேக நுகர்வோருக்கு உதவுகிறது, இது மிகவும் ஆக்கப்பூர்வமான நுண்-தொழில்முனைவோர் திறமைக் குழுவின் தேவைக்கு வழிவகுக்கிறது. இந்தத் துறைகளின் வளர்ச்சிக்கான இந்தத் தேவையை ஸ்கேல் டிசைன் ஸ்டுடியோ பூர்த்தி செய்கிறது.