சின்னத்திரையில் நடிப்பால் அசத்திவந்த சேத்தன் ‘விடுதலை’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் தனது அட்டகாசமான பங்களிப்பால் பாராட்டுகளைப் பெற்றார். அதையடுத்து அவர் நடித்திருக்கும் ஜமா’. வரும் ஆகஸ்ட் 2-ல் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் அவரிடம் பேசியபோது…
”இதுபோன்ற அற்புதமான திரைப்படத்தை உருவாக்கிய பாரி இளவழகன் மற்றும் எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர்கள் இருவரையும் முதலில் பாராட்டுகிறேன். கோல்ட்- ப்ளெட்டட் க்ரைம் த்ரில்லர் அல்லது மேற்கத்திய கருப்பொருளை கதைக்களமாகத் தேர்ந்தெடுப்பது பல புது இயக்குநர்களின் பொதுவான நடைமுறையாகிவிட்ட நிலையில், நமது கலாச்சாரத்தின் நெறிமுறை அழகியலை கதையாக்கிய பாரியின் துணிச்சலான முடிவு தனித்துவமானது.
ஒரு இயக்குநராக, அவர் அதிக உயரங்களை அடைவதோடு சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் அங்கீகரிக்கப்படுவார். வெற்றிமாறன் சாரின் விடுதலைப் படத்திற்குப் பிறகு, ‘ஜமா’ படத்தில் வலுவான கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். திரையரங்குகளில் இருக்கும் ஒவ்வொரு பார்வையாளர்களின் இதயத்தையும் தொடும் படம் இது” என்றார்.
படத்தை பரி இளவழகன் இயக்கி, நடித்திருக்கிறார். சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என் மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஜேசுராஜ், எஸ்.சாரதி கிருஷ்ணன், சிவா மாறன், ஏ.கே.இளவழகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்.
படத்தை பிக்சர் பாக்ஸ் நிறுவனத்தின் அலெக்சாண்டர் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்.
எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட்டின் எஸ். சாய் தேவானந்த், எஸ். சசிகலா, எஸ். சாய் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.