பாராட்டோடு ரூ 40 லட்சம் ஊக்கப்பரிசு… பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட ‘செஸ் ஒலிம்பியாட்’ சாதனையாளர்களைக் கெளரவித்த வேலம்மாள் நெக்ஸஸ்!

வேலம்மாள் நெக்ஸஸ் கல்வி நிறுவனம், 45-வது FIDE செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கம் வென்ற கிராண்ட் மாஸ்டர்கள் ஆர் பிரக்ஞானந்தா, ஆர் வைஷாலி, டி குகேஷ், ஸ்ரீநாத் நாராயணன், அர்ஜுன் கல்யாண் உள்ளிட்ட ஐந்து பேரை கெளரவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்வில், நாட்டிற்கும் வேலம்மாள் கல்வி நிறுவனத்திற்கும் பெருமை சேர்த்த அந்த ஐந்து பேரின் சிறப்பான சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டது. அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக ரூ.40 லட்சம் வழங்கப்பட்டது.

அடுத்த தலைமுறை செஸ் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், வேலம்மாள் 1000 சதுரங்கப் பலகைகளை அரசுப் பள்ளிகள் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கு நன்கொடையாக அளித்து, எதிர்கால செஸ் வித்தகர்களுக்கு அடித்தளம் அமைத்தது.

இந்த செயல் மூலம் விளையாட்டு மற்றும் கல்வித்துறை இரண்டிலும் திறமை மற்றும் சிறப்பை வளர்ப்பதில் வேலம்மாளின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.

நிகழ்வில், வேலம்மாள் நெக்ஸஸுக்கு ஹங்கேரியின், சிறந்த பள்ளி விருது’ வழங்கப்பட்டது. துணை முதல்வர் ஸ்ரீராம் வேல்மோகன் பெர்றுக்கொண்டார். இந்த சர்வதேச அங்கீகாரம், கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் பள்ளியின் சிறந்த பங்களிப்புகளுக்கு, வேலம்மாளின் உலகளாவிய நற்பெயருக்கு  சான்றாக நிற்கிறது. இது மாணவர்களையும் நிறுவனத்தையும் சர்வதேச கவனத்திற்கு கொண்டு செல்கிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here