
இப்படத்தில் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சாய் குமார், தணிகெல்லா பரணி மற்றும் , நர்ரா ஸ்ரீனிவாஸ் பலர் நடிக்கிறார்கள். சூது கவ்வும், சேதுபதி, தெகிடி, மிஸ்டர் லோக்கல், மாறா போன்ற படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் நவின் நூலி இப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஐதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் இன்று காலை 10 மணியளவில் படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. தனுஷின் முதல் நேரடி தெலுங்கு படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி
தயாரிப்பு நிறுவனம் : சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
தயாரிப்பாளர்கள்: நாக வம்சி .S – சாய் சௌஜன்யா
நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ். வெங்கடரத்தினம் (வெங்கட்)
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா
எடிட்டர்: நவின் நூலி
ஒளிப்பதிவாளர் : தினேஷ் கிருஷ்ணன்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
வழங்குபவர்: PDV பிரசாத்
மக்கள் தொடர்பு : லக்ஷ்மி வேணுகோபால் , ரியாஸ் கே அஹ்மத்