தி வாலன்டரி ஹெல்த் சர்வீசஸ் (VHS) மருத்துவமனையும் எம்.எம்.எம். (MMM) மருத்துவமனையும் இணைந்து, இதயம் சார்ந்த பரிசோதனைகளுக்கும் ஆலோசனைகளுக்குமான ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தியுள்ளன.
எம்.எம்.எம். மருத்துவமனையின் சிறப்பான இதயநோய் மருத்துவம், வி.எச்.எஸ்.சின் குறைந்த கட்டண சேவையோடு ஒருங்கிணைந்து வழங்கப்படும்.
எம்.எம்.எம். மருத்துவமனையில் பயிற்சி பெற்ற மருத்துவர்களாலும் செவிலியர்களாலும் இந்தப் பிரிவு நிர்வகிக்கப்படும்.
இந்தப் பிரத்யேக பிரிவுக்கான கட்டடம், தரமணியிலுள்ள வி.எச்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ளது. எம்.எம்.எம். மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களையும் செவிலியர்களையும் கொண்ட இந்தப் பிரிவில், தீவிர சிகிச்சை வசதியும் உண்டு. மே 16, 2022 முதல் இந்தப் பிரிவு செயல்படத் தொடங்கும்.
எதிர்காலத்தில், தமிழ்நாட்டின் நகர மற்றும் கிராம மக்களிடைய இதயநோய்கள் பெருகுவதற்கான அபாயம் பெருகுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கொழுப்புகள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, முன்நீரிழிவு ஆகிய பாதிப்புகள்
மக்களிடைய அதிகரித்துவருவதால், இதயநோய்களும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இந்தப் புதிய பிரிவு தொடர்பாக கருத்துத் தெரிவித்த மெட்ராஸ் மெடிக்கல் மிஷனைச் சேர்ந்த கெளரவ செயலாளர் எம்.எம்.பிலிப், “இந்தியாவில் மரணம் அடைபவர்களின் முக்கிய காரணியாக இதயநோய்கள் இருக்கின்றன. மேலும், இதய நோய் மருத்துவத்துக்கான தேவை சென்னையில் அதிகரித்து வருவதால், நகரத்தின் பிற பகுதிகளுக்கும் எங்கள் சேவை பரவ வேண்டும் என்பதற்காக இந்தப் பிரிவைத்
தொடங்குகிறோம்.
எம்.எம்.எம்.ஐப் பொறுத்தவரை, வி.எச்.எஸ்.சுடன் நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த உறவின் மூலம், சென்னையின் இதரப் பகுதிகளில் உள்ளோருக்கு, மிகத்தரமான சிகிச்சையைக் கொண்டுசேர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்றார்.
தி வாலன்டரி ஹெல்த் சர்வீசஸ் மருத்துவமனையின் கெளரவ செயலாளர், டாக்டர் எஸ். சுரேஷ், இந்த முயற்சி பற்றி, “வாலன்டரி ஹெல்த் சர்வீசஸ் மருத்துவமனை
என்றாலே, குறைவான கட்டணத்தில் உலகத் தரத்திலான மருத்துவ சேவையை வழங்கும் அமைப்பு என்ற புகழைப் பெற்றுள்ளது. தென் சென்னைப் பகுதி வாழ்
மக்களுக்காக இந்த நவீனமான இதய மருத்துவ பிரிவைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஏழை எளியவர்களுக்கு சகாயவிலையில் மருத்துவம் கிடைக்கவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். இது, அனைத்துத் தரப்பு மக்களுக்கும்
உயர்தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என்ற எம்.எம்.எம். மருத்துவமனையின் குறிக்கோளோடு ஒருங்கிணைந்துள்ளது என்பதே சிறப்பானதாகும்” என்றார்.
புதிய இதயநோய்ப் பிரிவு பற்றி மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் இதயநோய்த் துறை இயக்குநர் டாக்டர் அஜித் முல்லசேரி, “இந்த இதயநோய்ப் பிரிவில்
பணியாற்றும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கு, எம்.எம்.எம். மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்குத் தொடர்ந்து பல்வேறு நிலையில் ஆதரவும் உதவிகளும் செய்யப்படும். எம்.எம்.எம். மருத்துவமனை
இதயநோய் நிபுணர்களோடு இவர்களுக்கு நேரடி தொடர்பு இருக்கும். அவர்களுடைய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் படி, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படும்.
தேவைப்பட்டால், மேல் சிகிச்சைக்கு, நோயாளிகள் முகப்பேரில் உள்ளஎம்.எம்.எம். மருத்துவமனைக்கு மாற்றப்படுவர்,” என்றார்.
சிறப்பு புறநோயாளிகள் கட்டடத்தை, மே 14, 2022 அன்று, வி.எச்.எஸ். தலைவர் திரு. என். கோபால்சுவாமி அவர்கள் தொடங்கிவைப்பார். ‘வி.எச்.எஸ். எம்.எம்.எம்.
இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியோவாஸ்குலர் டிசீசஸ்’ பிரிவை, வி.எச்.எஸ். கெளரவ செயலாளர் பேரா. சுரேஷ் முன்னிலையில், வி.எச்.எஸ். நிர்வாக அறங்காவலர் திரு. ஆர். ராஜகோபால் திறந்துவைப்பார். சிறப்பு விருந்தினராக, எம்.எம்.எம். கெளரவ
செயலாளர் திரு. எம்.எம். பிலிப் கலந்துகொள்வார்.
வி.எச்.எஸ். இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் யுவராஜ் குப்தா நன்றியுரை வழங்குவார்.