‘வெந்து தணிந்தது காடு‘ சினிமா விமர்சனம்
‘தாதாக்கள் கூட்டத்தில் புள்ளைப்பூச்சி சேர்ந்தால் அதுவும் தாதாவாகும்‘ என்ற, காலங்காலமாக சினிமாக்களில் பார்த்துப் பார்த்து நொந்து பழகிய கதை ‘வெந்து தணிந்தது காடு’ வடிவத்தில்…
20 வயதைக் கடந்த அந்த அப்பாவி கிராமத்து இளைஞன் ஏன் செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என தெரியாமலே யார் யாரையோ சரமாரியாக போட்டுத் தள்ளும் கூட்டத்துக்குள் வந்து சிக்குகிறான். ஒரு கட்டத்தில், தன் முதலாளி யாருக்காக வேலை செய்கிறாரோ அந்த தாதாவுக்கே பாதுகாவலனாகிறான். அவரது எதிரிகள் பலரையும் பரலோகத்துக்கு அனுப்புகிற வேலையைத் தொடர்கிறான்.
கொலை செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிற, நினைத்தாலும் திரும்பி வர வழியில்லாத பாதையில் துப்பாக்கி, ரத்தம் என வாழ்ந்து கொண்டிருப்பவனின் மனதில் ஒருத்தி நுழைகிறாள். அதன்பிறகாவது அவன் தன் மனதுக்குப் பிடித்த வாழ்க்கையை அனுபவிக்க முடிந்ததா இல்லையா என்பதே திரைக்கதை…
கிராமத்தில் முட்செடிகளை வெட்டிப் போட்டு அதே முட்செடிகளை பாதுகாக்கும் கிராமத்தானாக மிக எளிமையாக அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே ஈர்க்கிறார் சிம்பு. பரோட்டா கடையில் வேலைக்குச் சேர்ந்து டேபிள் துடைப்பது, அந்த கடையில் கொத்து பரோட்டா போடுவதோடு ஆட்களை கொத்திப் போடுவதும் நடக்கிறது என்று அறியும்போது அதிர்வது, தாதாவானபின் ஆக்ஷன் அதிரடி களத்தில் ஹீரோயிஸம் காட்டுவது என சிம்பு படம் முழுக்க தெம்பு. நடையில் காட்டியிருக்கும் வித்தியாசமும் ரசிக்க வைக்கிறது!
நடிகை பிந்துமாதவியின் கண்களை நகலெடுத்துப் பொருத்திக் கொண்டவர் போலிருக்கிறார் நாயகி சித்தி இத்னானி. சிரிக்கும்போது இரண்டு கன்னங்களிலும் குழி விழும் அந்த 25 வயதுப் பெண், 21 வயது சிம்புவை அந்த குழிக்குள் இழுத்துப் போடும் விழியசைவு அழகு!
மனதுக்குப் பிடித்தவளிடம் உரிமையாக முத்தம் கொடுக்க அனுமதி கேட்பது, அவள் மறுக்கிறபோது முத்தம் கொடுத்துட்டுப் போ என இழுத்துப் பிடிப்பது என நகரும் ரொமான்ஸ் காட்சிகள் கவிதை. கெளதம் மேனன் டச்!
ராதிகா பாசக்கார அம்மாவாக வந்தால் என்னவெல்லாம் செய்வாரோ அதை இந்தப் படத்திலும் செய்திருக்கிறார்.
தாதாக்கள் இருவரும் தேவைக்கேற்ப கம்பீரம் காட்டுகிறார்கள். தாதாக்களுக்கு மேல் சில தாதாக்கள், அடியாட்கள், அடிவருடிகள் என திரும்பிய பக்கமெல்லாம் வன்முறையை அள்ளித் தெளிக்க ஏராளம் பேர். தங்களுக்கான வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
துளசியை இதுவரை கருணையே உருவாய்த்தான் பார்த்திருக்கிறோம். இந்த படத்தில் கொஞ்சம் வேறுமாதிரி பார்க்க முடிகிறது. ஆனாலும், நடிப்பில் சொல்லிக்கொள்ள ஏதுமில்லை.
கதையோட்டத்தின் திருப்புமுனைக்கு அஸ்திவாரம் போடுகிற அப்புக்குட்டி, உயரத்தில் குட்டியாக இருந்தாலும் எட்டிப் பாய்வதிலும் வெட்டிச் சாய்ப்பதிலும் கெட்டியாக இருக்கிற ஜாபர் சாதிக் என இன்னபிற கதாபாத்திரங்களில் வருபவர்களும் கவனிக்க வைக்கிறார்கள்.
கதை சுனாமிக் கொந்தளிப்போடு பயணிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தாமரையின் வரிகள் கடற்கரை காற்றாய் மனம் வருடுகிறது!
கலை இயக்குநரின் மெனக்கெடலும், ஒளிப்பதிவும் படத்தின் பலம்!
‘மெல்லிய காதல் கதைகளை இயக்குவதில் தேர்ந்தவர்’ என பெயர் பெற்ற கெளதம் மேனன், தனக்கு கேங்ஸ்டர் படங்களை இயக்கவும் தெரியும் என நிரூபிக்க ஜெயமோகனின் கதையை வைத்துக் கொண்டு போராடியிருக்கிறார். ஹீரோவாக சிம்பு சிக்கியதால் சேதாரமில்லை!
——————-
வெந்து தணிந்தது காடு’ படத்தின் நடிகர் நடிகைகள்:-
Muthuveeran : Silambarasan TR
Paavai : Siddhi Idnani
Latchumi : Radhika Sarathkumar
Sridharan : Neeraj Madhav
Kutty Bhai : Siddique
Iyer: Delhi Ganesh
Aadithya Baaskar
Gomathi : Angelina
Saravanan : Appukutty
Rawther : Jaffer Sadiq A
Sermadurai : Bava Chelladurai
Ganesh Iyer : Kavithalaya Krishnan
Durga : Tulasi
Karjee : Sara
Esakki : Richard James Peter
Maasanam : Phathmen
Arunjunai : Manikandan
Selvi : Geeta Kailasam
Sapna : Shrisha
Mahalakshmi : Ajmina Kassim
Arunachalam : Jaisinth
Rauf Bhai : Shivamani
Samir Bhai : Deepak Dutta Sharma
தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
Banner: Vels Film International
Production: Dr. Ishari K Ganesh
Direction: Gautham Vasudev Menon
Written by Jeyamohan
DOP – Siddhartha Nuni
Production Designer – Rajeevan
Editor – Anthony
Lyrics – Thamarai
Choreography – Brinda
Styling and Costumes – Uthara Menon
Action Directors – Lee Whittaker, Yannick Ben
Executive Producer – AshwinKumar
Colorist – G Balaji
Sound Design – Suren G, S Alagiakoothan