மார்ச் 4-ம் தேதி முதல் மகளிர் ப்ரீமியர் லீக் (WPL)! கலர்ஸ் தமிழ், ஸ்போர்ட்ஸ்18, ஜியோசினிமா வழியாக பார்த்து ரசிக்கலாம்.

வரும் மார்ச் 4-ம் தேதி தொடங்கும் மகளிர் ப்ரீமியர் லீக் (WPL) தொடக்க சீசனுக்கான தனது தொலைக்காட்சி வலையமைப்பின் விமர்சகர்கள் குழுவை வயாகாம் 18 நிறுவனம் அறிவித்திருக்கிறது.

குழுவில் இடம்பெறுபவர்கள்:-

தமிழ்: நிரஞ்சனா நாகராஜன், ஆர்த்தி சங்கரன், அபினவ் முகுந்த், அனிருதா ஸ்ரீகாந்த், வித்யுத் சிவராமகிருஷ்ணன், சுதிர் சீனிவாசன், பகவதி பிரசாத், ஆர் ஸ்ரீதர்

ஆங்கிலம்: கேட் கிராஸ், நட்டாலி ஜெர்மானோஸ், மெல் ஜோன்ஸ்

இந்தி: அஞ்சும் சோப்ரா, ரீமா மல்ஹோத்ரா, சமந்தா லோபட்டோ, ஜாகீர் கான், ஆகாஷ் சோப்ரா, பார்த்திவ் பட்டேல், அனந்த் தியாகி மற்றும் சபா கரீம், பூனம் ரவுத், பிரக்யான் ஓஜா

கன்னடம்: வேதா கிருஷ்ணமூர்த்தி, கருணா ஜெயின், வெங்கடேஷ் பிரசாத், சுஜய் சாஸ்திரி, ராகவேந்திர ராஜ், சுமந்த்

தெலுங்கு: சுனிதா ஆனந்த், ஸ்ரவந்தி நாயுடு, சந்தீப் பவனகா, விஜய் கவுட், வெங்கட்பதி ராஜு, ஹனுமா விஹாரி, அக்‌ஷத் ரெட்டி

இவர்கள் இந்த மாபெரும் போட்டியை 4K ரெசல்யூஷனில் வழங்க ஒருங்கிணைந்துள்ளனர்.

மார்ச் 4ம் தேதி முதல் ஆரம்பமாகும் WPL-ன் முதல் சீசனின் தொடக்க போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டிகளை ஜியோசினிமாவில் தமிழ் ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், கட்டணமின்றி இலவசமாக பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.

தமிழில் கலர்ஸ் தமிழ் சேனலிலும், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஸ்போர்ட்ஸ்18 – 1 SD & HD சேனலிலும், ஹந்தியில் ஸ்போர்ட்ஸ்18 கேல் சேனலிலும், மற்றும் கன்னடத்தில் கலர்ஸ் கன்னடா சினிமா சேனலிலும் பார்வையாளர்கள் விறுவிறுப்பான இந்த கிரிக்கெட் போட்டித் தொடரை நேரலையாக கண்டு இரசிக்கலாம்.

இந்த சீசன் முழுவதிலும், போட்டி நிகழ்வுகள் குறித்து நிபுணர்களின் கருத்துகள் மற்றும் விமர்சனங்களோடு வீராங்கனைகளின் நேர்காணல்களையும் வயாகாம்18 தனது ஸ்டுடியோவிலிருந்து ஒளிபரப்பும். திறமையான தொகுப்பாளினிகளான சஞ்சனா கணேசன் மற்றும் ரிதிமா பதக் ஆகியோர் சுஹாய்ல் சந்தோக் மற்றும் அனந்த் தியாகி ஆகியோருடன் இணைந்து இந்த தினசரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.

இதற்கும் கூடுதலாக இந்த சீசன் நடைபெறும் காலம் முழுவதிலும் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் WPL-ல் அவ்வாரத்தில் நடைபெற்ற போட்டிகளது முக்கிய நிகழ்வுகளின் வாராந்திர தொகுப்பையும் இரசிகர்கள் கண்டு மகிழலாம்.

ஜியோசினிமாவை பதிவிறக்கம் (iOS & Android) செய்வதன் வழியாக தாங்கள் விரும்பும் விளையாட்டு நினைவுகளை (மெமரிஸ்) வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பார்த்து மகிழலாம். சமீபத்திய நிகழ்நிலைத் தகவல்கள், செய்திகள், ஸ்கோர்கள் மற்றும் வீடியோக்களுக்கு Facebook, Instagram, Twitter மற்றும் YouTube and JioCinema on Facebook, Instagram, Twitter and YouTube ஆகியவற்றின் மீது ஸ்போர்ட்ஸ்18-ஐ விளையாட்டு இரசிகர்கள் பின்தொடரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here