கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்.’ இயக்குநர் சுசிகணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் ஆர் கே சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் கதையில் காவல் கட்டுப்பாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது. அது தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக பல லட்ச ரூபாய் செலவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து, பட வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் கயல் ஆனந்தியின் இந்த முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள எழுதியுள்ளார். சுதர்ஷன் இசையமைத்துள்ளார். ஜோகன் செவனேஷ் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை டி.என். கபிலன் கவனிக்க, மக்கள் தொடர்பாளராக சுரேஷ் சந்திரா பணிபுரிகிறார்.
படத்தின் தயாரிப்பாளர் ‘பூம்பாரை முருகன் புரடக்ஷன்ஸ்’ ரஞ்சனி படம் மிக விரைவில் திரைக்கு வரும் என்றார்.