பூஜையுடன் தொடங்கிய யோகிபாபுவின் புதிய படம்!

யோகிபாபு, சமீப காலங்களில் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து ஒரு கதாநாயகனாகவும், தன் திறமையை நிரூபித்து மக்களின் உள்ளத்தை தன் வசமாக்கியுள்ளார்.

இப்போது அவரது நடிப்பில் கே வி கதிர்வேலுவின் எழுத்து மற்றும் இயக்கத்தில், பிரபல நடன பள்ளியான ராக் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் உருவாக இருக்கும் பெயர் சூட்டப்படாத ப்ரொடக்ஷன் நம்பர் ஒன் என்னும் திரைப்படத்தின் பூஜை, சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் கே வி கதிர்வேலு இதற்கு முன்பாக சசிகுமார்  நடிப்பில் வெளிவந்த ராஜவம்சம் என்னும் திரைப்படத்தை இயக்கியவர்.

இன்றைய விழாவில் நடிகர்கள் சென்ராயன், சௌந்தர்ராஜா,, சாம்ஸ், நடிகை நிரோஷா, இயக்குனர் சுராஜ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here