Home சினிமா  பிரம்மானந்தத்துடன் இணைந்து நடித்து தெலுங்கில் அறிமுகமாகும் யோகி பாபு!

 பிரம்மானந்தத்துடன் இணைந்து நடித்து தெலுங்கில் அறிமுகமாகும் யோகி பாபு!

யோகி பாபு தெலுங்கில் அறிமுகமாகும் பாப்பி ரெட்டி படத்தின் மூலம் நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்துடன் இணைகிறார்.

படத்தை முரளி மனோகர்ரெட்டி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் இரண்டு நகைச்சுவை ஜாம்பவான்கள் ஒரே படத்தில் இணைவதால் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

படப்பிடிப்பு நேரத்தில், பிரம்மானந்தம் மற்றும் யோகிபாபுவுக்கு இடையே மிகுந்த நட்பு உருவானது. அதையடுத்து பிரம்மானந்தம் தன் வீட்டுக்கு யோகிபாபுவை அழைத்தார். அப்போது தனது வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்துள்ள ‘நான் பிரம்மானந்தம்’ என்ற புத்தகத்தை நினைவுப் பரிசாக யோகிபாபுவிடம் வழங்கினார்.

அது பற்றி பேசிய யோகிபாபு, தெலுங்கு சினிமா என்னை இப்படிப்பட்ட அன்புடனும் ஆதரவுடனும் வரவேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பிரம்மானந்தம் சார் போல ஒரு லெஜண்டுடன் இணைவது பெருமையாக உள்ளது.

பிரம்மானந்தம் மற்றும் யோகி பாபு இணையும் குர்ரம் பாப்பி ரெட்டி படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு அதிரடியான நகைச்சுவை விருந்தாக இருக்கும். இரண்டு துறைகளின் ஐகானிக்கள் இணையும் இந்த படம், ஒரு கலாச்சார சங்கமமாகவும், நகைச்சுவையின் பண்டிகையாகவும் அமையும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்