Home சினிமா இது இளமையான என்டர்டெயின்மென்ட் படம்; நிச்சயம் படம் பார்ப்பவர்களை திருப்திப்படுத்தும்! – ‘யோலோ’ பட விழாவில்...

இது இளமையான என்டர்டெயின்மென்ட் படம்; நிச்சயம் படம் பார்ப்பவர்களை திருப்திப்படுத்தும்! – ‘யோலோ’ பட விழாவில் இயக்குநர் எஸ் சாம் 

எஸ் சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ‘யோலோ.’

வரும் செப்டம்பர் 12-ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் சாம் ”முதலில் என் அப்பா அம்மாவுக்கு நன்றி. அவர்களால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன்.அமீர் சார் ஒரு சிங்கம் மாதிரி. அவருடன் வேலை செய்வது சவாலானதாக இருந்தது. அவர் கடின உழைப்பாளி. தயாரிப்பாளரின் பணத்தை வீணாக்கக் கூடாது என்பதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். அவரால்தான் புதுமுகங்களை வைத்து படம் எடுக்க தைரியம் வந்தது.

நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம் அமீர் சாரும், கனி சாரும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்கள் எனக்கு இப்போதுவரை நிறைய உதவி செய்திருக்கிறார்கள்.

கனி சார் எந்த ஒரு நொடியையும் வீணாக்க மாட்டார். அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டேன். “எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்” என்பார். அவர் இந்தப் படத்திற்குப் பெரிய ஆதரவாக இருந்தார்.

எங்கள் அழைப்பை மதித்து வந்த ஆர். கே. செல்வமணி சாருக்கு நன்றி. எனக்கு இப்பட வாய்ப்பை தந்த மகேஷ் சாருக்கு நன்றி. அவர் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்த உறுதுணையாக இருந்தார். அதுபோலவே தேவை லீடாக அறிமுகப்படுத்தினார்.

ஆகாஷ் ஒரு அப்பாவி பையனாக நன்றாக நடித்துள்ளார். பலரைத் தேடி கடைசியாக தேவிகாவை ஒப்பந்தம் செய்தோம். அவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.
என் நண்பன் ராம் — கல்லூரியிலிருந்தே ஒன்றாக வேலை செய்திருக்கிறோம். இன்ஸ்டிடியூட்டில் சூரஜ் உடன் பணிபுரிந்திருக்கிறேன். நான் கேட்டதைச் சிறப்பாகச் செய்து தந்துள்ளார்.சகிஷ்னா இந்தப் படத்தில் 6 வெவ்வேறு பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார்.எடிட்டர் ரமேஷ் நேரடியாக வந்து எனக்கு உதவினார். தயாரிப்பில் நாகராஜ் புரொடக்ஷன் மேனேஜர் பெரிய ஆதரவாக இருந்தார்.என் உதவி இயக்குநர்கள் குழு என்னைவிட வேகமாக இருப்பார்கள். ரகு மாஸ்டர், டேஞ்சர் மணி மாஸ்டர் இருவருக்கும் நன்றி.பாடலாசிரியர்கள் சூப்பர் சுப்பு, முத்தமிழ், சதீஸ்காந்த், சகிஷ்னா சேவியர், மகேஷ் செல்வராஜ் — இவர்களின் வரிகள் படத்துக்கு வலு சேர்த்துள்ளன.

படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படவா கோபி பெரிய ஆதரவாக இருந்தார். நன்றி.

இது இளமையான எண்டர்டெயின்மென்ட் படம். நிச்சயம் படம் பார்ப்பவர்களை திருப்திப்படுத்தும். மீடியா நண்பர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். நன்றி” என்றார்.

நடிகர் தேவ் ”இந்த வாய்ப்பு வரக் காரணமாயிருந்த அரவிந்த் பிரதருக்கு நன்றி. அவர் தான் இப்படத்திற்கு ஆள் தேடுகிறார்கள் என என்னை அனுப்பினார். கதை கேட்டேன், ரொம்ப பிடித்தது. என்னைத் தேர்ந்தெடுப்பார்களா என சந்தேகம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் போன் செய்து, “புதுமுகம் தான் வேண்டும், நீங்கள் பொருத்தம்” என்று சொன்னார். மகிழ்ச்சி. தயாரிப்பாளர் மொத்த டீமுக்கும் சுதந்திரம் தந்தார். சாம் சார் பக்காவாக திட்டமிட்டு உழைத்தார். என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. என்னை இப்படிப் பார்க்க ஆசைப்பட்ட என் அப்பா, அம்மா, மாமா மூவரும் இல்லை. அவர்களின் ஆசிர்வாதத்தில்தான் இது நடந்துள்ளது. செப்டம்பர் 12 யோலோ திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் மகேஷ், ஒளிப்பதிவாளர் சூரஜ், இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர், மாஸ்டர் ரகு, ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி, எழுத்தாளர் ராம்ஸ் முருகன், TrendLoud சார்பில் ஜிதேஷ், வி ஜெ நிக்கி, நடிகர் ஹார்ட் பீட் கிரி, Generous Entertainment சார்பில் கோகுல், நடிகர் ஆகாஷ் பிரேம், நடிகர் படவா கோபி, நடிகை தேவிகா, தயாரிப்பாளர் கே வி துரை, இயக்குநர் சதீஷ், இயக்குநர் ஏ ஆர் கே சரவணன், நடிகர் தேவ், இயக்குநர் ஆர். கே. செல்வமணி, இயக்குநர் அமீர், இயக்குநர் சமுத்திரகனி உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்