சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, பாலையா இயக்கத்தில் கிராமத்து பின்னணியில், கலக்கலான ஃபேமிலி எண்டர்டெயினராரக உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.

முன்னதாக BR Talkies Corporation தயாரிப்பில், மிக அழுத்தமான படைப்பாக “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது தயாரிப்பாக, இந்த புதிய படத்தை அனைத்து அம்சங்களுடன், நகைச்சுவை நிறைந்த, முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாக்கி வருகிறது.

இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்துக் காட்டும் வகையில், சமூக அக்கறை கருத்தோடு, கிராமத்து பின்னணியில், கலக்கலான காமெடி டிராமாவாக இப்படத்தினை இயக்குநர் K பாலையா எழுதி இயக்குகிறார்.

இப்படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தீபா பாலு, பிரிகிடா சாகா, தேஜா வெங்கடேஷ் ஆகியோருடன் கருணாகரன், வேல ராமமூர்த்தி, ஆதித்யா கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை, இராமநதபுரம், தேனி, சென்னை பகுதிகளில், 45 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி இணைந்து இப்படத்தை, பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது படத்தின் போஸ்ட புரடக்சன் பணிகள் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here