இந்திய அளவில் பர்னிச்சர் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது ராயலோக் பர்னிச்சர் நிறுவனம். இந்த நிறுவனம் தனது 6வது ஷோரூமை சென்னை ஈக்காட்டுதாங்கலில் திறந்துள்ளது.சென்னை நகர மக்களின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு தேவையான அனைத்துவித பர்னிச்சர் பொருட்களும் இந்த ஷோரூமில் இடம் பெற்றுள்ளது. இங்கு வீட்டிற்கு தேவையான சோபா, கட்டில், நாற்காலி வகைகள் மற்றும் அனைத்துவிதமான பர்னிச்சர் பொருட்களும், அலுவலகங்களுக்கு தேவையான மேஜை நாற்காலி உள்ளிட்ட பொருட்களும் உள்ளன. திறப்பு விழாவையொட்டி சிறப்பு சலுகைகளையும் இந்நிறுவனம் வழங்குகிறது.

இந்நிறுவனம் நாடு முழுவதும் 150 சொந்த வர்த்தக ஷோரூம்கள் மூலமும், பிற வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை மையங்களில் பிரத்யேகமாக தனது தயாரிப்புகளையும் விற்பனை செய்து வருகிறது. தற்போது சென்னையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த ஷோரூம் மூலம் இந்தியா முழுவதிலுமான தனது விரிவாக்கத்தை மேலும் விரிவுபடுத்தி உள்ளது.

ராயலோக் பர்னிச்சர் ஷோரூம்களில் நவீன வாழ்க்கை முறைக்கேற்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டிற்கு தேவையான சோபா, சாய்வு இருக்கைகள், காபி டேபிள், கட்டில், சாய்வு நாற்காலிகள், சாப்பாட்டு அறையில் பயன்படுத்தும் பர்னிச்சர்கள், மாணவர்கள் படிப்பதற்கான டேபிள்கள் மற்றும் படுக்கை அறைகளுக்கு தேவையான பர்னிச்சர்கள் அதாவது கிங் மற்றும் குயின் சைஸ் என்னும் பெரிய மற்றும் சிறிய அளவிலான மெத்தைகள் என ஏராளமான பொருட்கள் உள்ளன. இங்கு உங்கள் வீட்டிற்கு அழகிற்கு அழகு சேர்க்கும் வகையில், பல்வேறு பர்னிச்சர் பொருட்கள் உள்ளன. அவற்றில் நூற்றாண்டின் மையப் பகுதியில் பிரபலமான பர்னிச்சர்கள், தற்போதைய நவீன காலத்திற்கேற்ற பர்னிச்சர்கள் மற்றும் சர்வதேச டிசைன் பர்னிச்சர்கள் என ஏராளமான பொருட்கள் உள்ளன.

இந்த புதிய ஷோரூம் இந்த நிறுவனத்தின் தலைவர் விஜய் சுப்பிரமணியம், நிர்வாக இயக்குனர் மதன் சுப்ரமணியம், சில்லறை விற்பனை பிரிவு தலைவர் எச்எஸ் சுரேஷ், விற்பனை பிரிவு தலைவர் பிரசாந்த் எஸ் கோட்டையன், வீட்டு அலங்காரப் பிரிவு தலைவர் இரினா மோசஸ் மற்றும் இந்நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவு தலைவர் சசிகுமார் சங்கர் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய இந்த நிறுவனத்தின் தலைவர் விஜய் சுப்பிரமணியம், ”நாடு முழுவதும் உள்ள எங்களின் அனுபவ ஸ்டூடியோக்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் அன்பையும் ஆதரவையும் நாங்கள் பெற்று வருகிறோம். அவர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதன் மூலம், நாங்களும் வளர்ச்சி அடைகிறோம். அதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களிடையே நாங்கள் நம்பிக்கையையும் வளர்ப்போம். எங்களின் இந்த புதிய ஷோரூமில் வீட்டை அழகுப்படுத்தும் வகையில் அனைத்துவிதமான பர்னிச்சர்களும் கிடைக்கும். இங்கு நவீன டிசைன்களில் ஏராளமான தயாரிப்புகள் உள்ளன. எனவே நகர் முழுவதும் உள்ள மக்கள் இங்கு குறைந்த விலையில் ஏராளமான நவீன பர்னிச்சர்களை வாங்கலாம்” என்றார்.

மேலும் இந்நிறுவனத்தின் ஷோரூம்களில் அமெரிக்கா, இத்தாலி, வியட்நாம், துருக்கி, ஜெர்மனி, மலேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் மிகப் பெரிய மற்றும் தனித்துவமிக்க பர்னிச்சர் பொருட்களும் கிடைக்கிறது. இந்தியா முழுவதும் 144 வாடிக்கையாளர்கள் அனுபவ மையங்களுடன் இந்நிறுவனத்திற்கு 150க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் உள்ளன. கடந்த 2010–ம் ஆண்டு பெங்களூரில் முதல் ஷோரூம் துவக்கப்பட்டதில் இருந்து இன்று வரை இந்தியா முழுவதும் இந்நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மெட்ரோ நகரங்கள் மற்றும் பெரிய மற்றும் சிறிய நகரங்களிலும் இந்நிறுவனம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திறப்பு விழாவில் பேசிய நிர்வாக இயக்குநர் மதன் சுப்பிரமணியம், ”நாடு முழுவதும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் எங்களின் அனுபவ ஸ்டோர்கள் மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நுகர்வோருக்கும் பர்னிச்சர்களை வாங்கும் அனுபவத்திற்கும் இடையே இடைவெளி இல்லாமல் செய்வதே எங்களின் முக்கிய நோக்கம் ஆகும். எங்கள் பிராண்ட் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் விதமாக, டெலிவரி நடைமுறைகளையும் நாங்கள் மேம்படுத்தியுள்ளோம்” என்றார்.

புதுமை, சிறந்த அனுபவம் மற்றும் தற்போதைய நவீன யுகத்திற்கு ஏற்ற எங்களின் ஆடம்பரமான மற்றும் நவீன பர்னிச்சர்கள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும் என்பதற்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here