ரிலீஸாவதற்கு முன்பே பல்வேறு சர்வதேச விருதுகளைக் குவித்துக் கொண்டிக்கிற, தேசிய விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிற, விரைவில் ரிலீஸாகவிருக்கிற ‘கட்டில்‘ படத்தின் இயக்குநரும், அந்த படத்தில் நாயகனாக நடித்திருப்பவருமான இ.வி.கணேஷ்பாபுவுக்கு இன்று பிறந்தநாள்!
அதையொட்டி கட்டில் படத்தை தயாரித்துள்ள மேப்பில் லீப்ஃஸ் புரொடக்சென்ஸ் சார்பில், உதவும் கரங்கள் விடுதியில் தங்கியுள்ள 500 பேருக்கு மதிய உணவளித்து தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இ.வி.கணேஷ்பாபு, ”மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் நமக்கு இருந்தாலே போதும். அதற்கான பணம் மற்றவர்கள் மூலமாக நமக்கு கிடைக்கும்.
இன்று நண்பரின் பண உதவியோடு உதவும் கரங்கள் விடுதிகளில் தங்கியுள்ள 500 பேருக்கு மதிய உணவளித்து எனது பிறந்தநாளை கொண்டாடினேன்.

தனது ஊர் எது, பெற்றோர் யார் என்று எதுவுமே அறியாமல்
தத்தெடுக்கப்பட்டு, பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தொடங்கி மேற்படிப்பு கற்கும் பிள்ளைகள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் முதியவர்கள் வரை பசியாறி நம்மை வாழ்த்தினார்கள். ஆதரவற்றவர்கள் என்று இந்த உலகில் யாருமே கிடையாது என்ற நிலை உருவாக நாமும் முயற்சி செய்யவேண்டும். அப்படி ஒரு சின்னஞ்சிறு முயற்சியே இது” என்றார்.

