யோகிபாபு நடிக்கும் ஃபேன்டஸி திரைப்படம்
“யானை முகத்தான்”.
பிரபல மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா இயக்குகிறார்.

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநரான ரெஜிஷ் மிதிலா, “யானை முகத்தான்” படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இதில் யோகிபாபு நாயகனாக நடிக்கிறார். ரெஜிஷ் மிதிலா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இத்திரைப்படம் முழுக்க, முழுக்க ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகி வருகிறது.

‘யானை முகத்தான்’ இப்படத்தில்,

கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார்.

அதே கணேஷ் கதாபாத்திரத்தில் ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் நடிக்கிறார்.
இவர் விநாயகர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட தீவிர பக்தர். ஏறக்குறைய தான் சந்திக்கும் அனைத்து நபர்களிடமும் கடன் வாங்கி விடுவார். பிறகு, வாங்கிய கடனைத் திருப்பி கொடுக்க முடியாமல் திணறுவார்.

இவரிடம், யோகி பாபு தன்னை விநாயகர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அத்துடன்
ரமேஷ் திலக்கிடம் ஒரு நிபந்தனையை முன்வைக்கிறார். இப்படி லூட்டி அடிக்கும் இவர்களை சுற்றி நடக்கும் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. இதை சுவாரசியமாக இயக்கியுள்ளார் டைரக்டர்.

இவர்களது அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளராக மல்லியக்கா கேரக்டரில் ஊர்வசியும்,
சிறிய பான் மசாலா கடை நடத்தும் மைக்கேலாக கருணாகரனும் நடிக்கிறார்கள்.

யோகிபாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ பாட்டி ), நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் எளிய ஆரம்பமாகி, ராஜஸ்தான் பகுதிகளில் நடந்தது.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து, இயக்கம் : ரெஜிஷ் மிதிலா
தயாரிப்பாளர்கள்: ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ்:
தயாரிப்பு நிறுவனம்: தி கிரேட் இந்தியன் சினிமாஸ்
ஒளிப்பதிவு : கார்த்திக்Sநாயர்
படத்தொகுப்பு : சைலோ
இசையமைப்பாளர்: பரத் சங்கர்
ஆடை வடிவமைப்பாளர்: குவோச்சாய்.S
ஒப்பனை: கோபால்
நிர்வாக தயாரிப்பு : சுனில் ஜோஸ்
தயாரிப்பு மேற்பார்வை : ஜெயபாரதி
முதன்மை இணை இயக்குனர்: நிதிஷ் வாசுதேவன்
இணை இயக்குனர்: கார்த்தி
இணை இயக்குனர்: அகில் V மாதவ்
உதவி இயக்குனர்கள்: பிரஜின் MP,
தண்டேஷ் D நாயர், வந்தனா:
விளம்பர வடிவமைப்பாளர்: சிவகுமார்
ஸ்டில்ஸ்: ஜோன்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here