பார்ப்போரிடமெல்லாம் கடன் வாங்கும் விநாயகர் பக்தராக யோகிபாபு… ‘யானை முகத்தான்’ படம் முழுக்க சுவாரஸ்யம்!

மலையாளத் திரையுலகில் முன்னணி இயக்குநரான ரெஜிஷ் மிதிலா, ‘யானை முகத்தான்‘ படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படம் முழுக்க, முழுக்க ஃபேன்டஸி சப்ஜெக்டில் உருவாகி வருகிறது.

படத்தில் யோகிபாபு கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கிறார். அதே கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் ரமேஷ் திலக் ஆட்டோ டிரைவராக நடிக்கிறார்.

இவர் விநாயகர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட தீவிர பக்தர். ஏறக்குறைய தான் சந்திக்கும் அனைத்து நபர்களிடமும் கடன் வாங்கி விடுவார். பிறகு, வாங்கிய கடனைத் திருப்பி கொடுக்க முடியாமல் திணறுவார். இவரிடம், யோகி பாபு தன்னை விநாயகர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அத்துடன் ரமேஷ் திலக்கிடம் ஒரு நிபந்தனையை முன்வைக்கிறார். இப்படி லூட்டி அடிக்கும் இவர்களை சுற்றி நடக்கும் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. யானை முகத்தான்’ படம் இப்படியான திரைக்கதையோடு செல்கிறது.

இவர்களது அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளராக மல்லியக்கா கேரக்டரில் ஊர்வசியும், சிறிய பான் மசாலா கடை நடத்தும் மைக்கேலாக கருணாகரனும் நடிக்கிறார்கள்.

இவர்களோடு ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ பாட்டி ), நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி, ராஜஸ்தான் பகுதிகளில் நடந்தது.

படக்குழு:-
எழுத்து, இயக்கம் : ரெஜிஷ் மிதிலா
தயாரிப்பாளர்கள்: ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ்
தயாரிப்பு நிறுவனம்: தி கிரேட் இந்தியன் சினிமாஸ்
ஒளிப்பதிவு : கார்த்திக் எஸ் நாயர்
படத்தொகுப்பு : சைலோ
இசையமைப்பாளர்: பரத் சங்கர்
ஆடை வடிவமைப்பாளர்: குவோச்சாய். எஸ்
ஒப்பனை: கோபால்
நிர்வாகத் தயாரிப்பு : சுனில் ஜோஸ்
தயாரிப்பு மேற்பார்வை : ஜெயபாரதி
முதன்மை இணை இயக்குனர்: நிதிஷ் வாசுதேவன்
இணை இயக்குனர்: கார்த்தி
இணை இயக்குனர்: அகில் வி மாதவ்
உதவி இயக்குனர்கள்: பிரஜின் எம்.பி,
தண்டேஷ் டி நாயர், வந்தனா
விளம்பர வடிவமைப்பாளர்: சிவகுமார்
ஸ்டில்ஸ்: ஜோன்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here