Home பொது ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலச்சந்தரின் பிறந்தநாள் கொண்டாட்டமாக ‘என்றென்றும் கே.பி.’ ஜூலை முழுவதும் புதுயுகம் தொலைக்காட்சியில்.

‘இயக்குநர் சிகரம்’ கே.பாலச்சந்தரின் பிறந்தநாள் கொண்டாட்டமாக ‘என்றென்றும் கே.பி.’ ஜூலை முழுவதும் புதுயுகம் தொலைக்காட்சியில்.

‘இயக்குநர் சிகரம்’ கே.பாலச்சந்தரின் பிறந்தநாளை ‘என்றென்றும் கே.பி.‘ என்ற நிகழ்ச்சி மூலம் ஜூலை மாதம் முழுவதும் கொண்டாடுகிறது புதுயுகம் தொலைக்காட்சி.

இந்த நிகழ்ச்சி ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 5, 2023 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகிறது.

சிக்கலான தனிப்பட்ட உறவுகள், தைரியமான சமூக கரு மற்றும் இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்காற்றிய கே. பி புதுமையான பல திரைப்படங்களை இயக்கி சாதனை படைத்தவர்.

பெண்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் பற்றி வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் அழுத்தமாக காட்சிப்படுத்தியவர்களில் பாலசந்தருக்கு பெரும் பங்குண்டு.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், சரிதா, சுஜாதா, மோகன், பிரகாஷ் ராஜ் என இவரால் ஜொலித்த நட்சத்திரங்களின் பட்டியல் நீளமானது.

அவருடை பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இயக்குநர் வசந்த், இயக்குநர் சரண், திருமதி புஷ்பா கந்தசாமி, திருமதி கீதா கைலாசம், எழுத்தாளர் இந்தரா சௌந்தராஜன், டெல்லி கணேஷ், இசைக்கவி ரமணன், கவிதாலயா கிருஷ்ணன், நடிகை சுலக்ஷனா, எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் சிறப்பு நேரலையில் பங்கேற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்