புகழ் ஹீரோவாகவும் வில்லனாக ரவி மரியாவும் நடிக்கும் படத்தை புதுமுக இயக்குநர் சஜோ சுந்தர் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
காமெடி திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பை பிரபல தயாரிப்பாளர் எச். முரளி, ஒளிப்பதிவாளர் சிவா இணைந்து கேமராவை இயக்கி, சித்ரா லட்சுமணன் கிளாப் அடித்து துவக்கி வைத்தனர். 
தற்காலிகமாக ‘புரொடக்சன் நம்பர் 27’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகி பிரக்யா நயன், வின்சென்ட் அசோகன், கும்கி அஸ்வின், திடியன் இந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.
படக்குழு:
தயாரிப்பு – எம். ஸ்ரீ வத்சன், எம். கோகுல் கிருஷ்ணன்
ஒளிப்பதிவு _ யு.கே. செந்தில்குமார்
இசை – சுபாஷ் முனிரத்தினம்
கலை – மு. து. பிரபாகரன்
படத்தொகுப்பு – ஃபாசில்
தயாரிப்பு மேற்பார்வை – ச. அருணாச்சலம்
இணை தயாரிப்பு – வி. கே. முருகேசன், திருப்பூர் ஜியோ, ஏ. என். செல்வராஜ்
மக்கள் தொடர்பு – டயமண்ட் பாபு
