சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த படம் ஏ.வி. எம். நிறுவனம் தயாரித்த ‘மனிதன்.’
இந்த படம் 38 வருடங்களுக்கு பிறகு டிஜிட்டல் வெர்சனாக வரும் அக்டோபர் 10-ம் தேதி தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் திரையரங்குகளில் ரிலீசாகிறது.
எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் வைரமுத்துவின் வைரவரிகளில் சந்திர போஸ் இசையில் வெளி வந்த படம் இது.
ரஜினி திரையுலகிற்கு வந்து 50 வருட பொன் விழாவான இந்த வருடத்தில் மனிதன்’ திரைப்படம் வெளியாவதால் அவருடைய ரசிகர்களுக்கு மிகப் பெரிய கொண்டாட்டமான தீபாவளியாக நினைக்கிறார்கள்.
படம் ரீ ரிலீஸ் என்று விளம்பரம் வந்தது. அதையடுத்து பெங்களூருவில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் பெங்களூருவில் உள்ள புஷ்பாஞ்சலி, பி.என்.புரா திரையரங்குகளுக்கு சென்று , படத்தை ரிலீசன்று காலை 6.30 மணி காட்சி போட சொல்லி தியேட்டர் மேனேஜரிடம் கேட்கிறார்கள் என்று அங்கிருந்து தகவல் வந்துள்ளதாம்.
அதையடுத்து, படத்தை ரிலீஸ் செய்யும் வினியோக உரிமை பெற்றுள்ள குருராஜா இண்டர்நேஷனல் நிறுவனத்தினர் ”மனிதன் படத்தை திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்கிறோம். 38 வருடங்கள் ஆனபின்னும் ரஜினி ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள்” என்று பெருமையாக கூறி உற்சாகமாகிறார்கள்.