மக்கள் மனதில் பெரிய ஹீரோவாக இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு; அதற்காகத் தான் கதை கேட்டேன்! – ‘ரஜினி கேங்’ பட விழாவில் நடிகர் ரஜினி கிஷன் 

ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, எம் ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினி கிஷன் ”ரஜினி கேங் எனது மூன்றாவது படம். ஏற்கனவே இரண்டு படம் செய்துவிட்டேன். மக்கள் மனதில் பெரிய ஹீரோவாக இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் என் கனவு. அதற்காகத் தான் கதை கேட்டேன். ரமேஷ் பாரதி சார் மூன்று கதை சொன்னார், அவரே இந்தக்கதை செய்யுங்கள், காமெடி மக்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். முதலில் நாமே தயாரித்தும், நடிக்கவும் வேண்டுமா? என யோசித்தேன், பிறகு நாமே தயாரித்து விடலாம் என முடிவு செய்து படத்தை ஆரம்பித்து விட்டோம்.

படத்தில் எல்லா பெரிய நடிகர்களையும் கமிட் செய்துவிட்டோம், ஆனால் எனக்கு ஹீரோயின் மட்டும் செட்டாகவில்லை. பலரை அணுகினோம் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை, இறுதியாக தான் திவிகா வந்தார். என்னுடன் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு நன்றி. முனீஷ்காந்த் என் நடிப்பைப் பாராட்டினார். ஷீட்டிங் போது கூல் சுரேஷ் வந்தார் அவருக்காக ரசிகர்கள் குவிந்து விட்டார்கள். 3 மணி நேரம் ஷீட்டிங் நிறுத்திவிட்டோம் அவருக்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். என்னுடன் நடித்த எல்லா பெரிய நடிகர்களும் பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள்.

ஒரு பாடல் நன்றாக வந்தால் போதும் என நினைத்தேன் ஆனால் இசையமைப்பாளர் மூன்று பாடல்களும் அட்டகாசமாகத் தந்தார். ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். மேனேஜர் சந்துரு என் வேலையை எளிமையாக்கிவிட்டார். அவருக்கு நன்றி. என் அப்பா சொன்னது போல ஒரு டீமாக எல்லோரும் உழைத்து ஒரு நல்ல படைப்பை உருவாக்கியுள்ளோம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர்  எம் ரமேஷ் பாரதி ”ரஜினி கேங் இது எல்லோருக்குமான படம். இதில் காமெடி, ஹாரர், எமோசன் என எல்லா அம்சங்களும் உள்ளது. இசையமைப்பாளர் ஜோன்ஸ் பெரும் திறமைசாலி அவருடன் இணைந்த பிறகு வேறு யாருடனும் வேலை பார்க்கவில்லை. அற்புதமான இசையமைப்பாளர். இப்படத்தில் அட்டகாசமான பாடல் தந்துள்ளார். ஒளிப்பதிவாளர் சதீஷ் அவரும் அப்படித்தான், அவருடன் இணைந்த பிறகு வேறு யாருடனும் வேலை பார்க்கவில்லை.

எடிட்டர் வினோத் மிகச்சிறப்பாக எடிட் செய்துள்ளார். எல்லோருமே ஒரு டீமாகத்தான் வேலை செய்துள்ளோம். இப்படத்தை மிகக் குறுகிய காலத்தில் முடிக்க என் உதவி இயக்குநர்கள் பெரிய உறுதுணையாக இருந்தார்கள். மேனேஜர் சந்துரு சார் படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருந்தார். அவருக்கு நன்றி. இப்படத்திற்கு என்ன டைட்டில் வைப்பது என நிறைய விவாதித்தோம், அப்போது கிஷன் சார் அவர் பெயரை ரஜினி கிஷன் என மாற்றினார், அதனால் அவர் கதாபாத்திரத்திற்கும் ரஜினி எனப் பெயர் வைத்தோம். அவரது பயணமும் அவருக்கு உதவும் கேங்கும் தான் இந்தக்கதை, அதனால் ரஜினி கேங் என வைத்திவிட்டோம்.

ரஜினி என்றாலே பவர் என்பதால் எல்லோருக்கும் பிடித்துவிட்டது. ரஜினி கிஷனுக்கு முதலில் இந்தப்படம் எப்படி வரும் என்ற சந்தேகம் இருந்தது. ஷூட் ஆரம்பித்த பின்னர் தான் நம்பினார். இந்தப்படத்தைச் சொன்ன நேரத்தில், சொன்ன மாதிரி முடித்துக்கொடுக்க அவர் என் மீது வைத்த முழுமையான நம்பிக்கை தான் காரணம்.

நிறைய ஹீரோயின் தேடி கடைசியாக திவிகா வந்தார், அவர் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றினார். மொட்டை ராஜேந்திரன், முனீஷ் காந்த் என எல்லா நடிகர்களும் எல்லோரும் இரவு பகல் பாராமல் நடித்துத் தந்தார்கள். கூல் சுரேஷ் எல்லாத்தையும் கச்சிதமாகச் செய்வார். ஏன் இவரை எல்லோரும் திட்டுகிறார்கள் எனத் தோன்றியது.

படத்தில் நடித்த எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்தார்கள். படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றிகள். இப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும் என உறுதியாகச் சொல்ல முடியும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்” என்றார்.

படம் பற்றி:-

பிஸ்தா திரைப்படம் மற்றும் உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குநர் M ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

மறைந்த ஸ்ரீ எஸ். செயின்ராஜ் ஜெயின் அவர்களால் நிறுவப்பட்ட MISHRI ENTERPRISES, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் திரைப்பட பைனான்ஸ், விநியோகம் மற்றும் தயாரிப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ஜெய் ஹிந்த், அஷ்டகர்மா ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, ரஜினி கேங் அவர்களின் மூன்றாவது பெரிய தயாரிப்பாக, பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில், அவர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள், அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என கலகலப்பான திரைக்கதையில், கமர்ஷியல் ஹாரர் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக திவிகா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ்,கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ப்ளூ எனும் நாய் படம் முழுக்க வரும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் அசத்தியுள்ளது.

பொறியாளன், போங்கு, சட்டம் என் கையில் போன்ற படங்களின் இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் 4 அற்புதமான பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த வருட இறுதியில் இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here