Home சினிமா இந்த படத்தில் சிலம்பம் பயிற்சி பெற்ற 300 பேரை நடிக்க வைத்திருக்கிறோம்! -‘சிலம்பம்’ படத்தின் டிரெய்லர்...

இந்த படத்தில் சிலம்பம் பயிற்சி பெற்ற 300 பேரை நடிக்க வைத்திருக்கிறோம்! -‘சிலம்பம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ.கே.எஸ்.ஜோதி பேச்சு 

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.’
அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ் அறிமுகமாகிறார். மெளனிகா ரெட்டி நாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த மே 16-ம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான பெப்ஸி விஜயன், இயக்குநர் பேரரசு, பவர் பாண்டியன், இயக்குநர் மோகன்.ஜி, நடிகர் கூல் சுரேஷ், ஸ்டண்ட் யூனியன் தலைவர் கே.அசோக், செயலாளர் சுகுமார், பொருளாளர் ஜான், இயக்குநர் ரவி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்வில் படத்தின் இயக்குநர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி பேசுகையில், “இந்த படத்தில் நிறைய சிலம்பம் மாஸ்டர்களை வச்சி பண்ணியிருக்கோம். எழில் மாஸ்டர் அதிகம் ஒத்துழைப்பு கொடுத்தார், ஆதம்பாக்கம் துரை மாஸ்டர், ஜோதி மாஸ்டர் ஆகியோர் அதிகம் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். எனக்கும் ஆசான் பவர் பாண்டியன் மாஸ்டர் தான், என் பிள்ளைகளுக்கும் ஆசான் அவர் தான். இந்தியாவில் இருக்கும் பல முன்னணி ஹீரோக்கள் அவரிடம் தான் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் மிகப்பெரிய இடத்துக்கு சென்றிருக்கிறார்கள். ஸ்டண்ட் யூனியன் இருக்கும் சுமார் 600 பேர் அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் தான். அப்படி ஒருவரிடம் நாங்களும் பயிற்சி பெற்றது பெருமை. ஒழுக்கம் என்ற பாடத்தை அவரிடம் தான் படிக்க வேண்டும். சிலம்பம் என்றாலே ஒழுக்கம் தான், அதையே மிக ஒழுக்கமாக சொல்லிக்கொடுப்பார், அவரை வணங்குகிறேன்.
இந்த படத்தில் சிலம்பம் பயிற்சி பெற்ற 300 பேரை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம். சிலரிடம் ஆங்கில வார்த்தையை பயன்படுத்துவார்கள், அதை தவிர்த்துவிட்டு தமிழில் வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறோம். ஒரு காலத்தில், கராத்தே, பாக்ஸிங் பயிற்சிக்கு பிள்ளைகளை தந்தைகள் அழைத்துச் செல்வார்கள், ஆனால் இப்போது சிலம்பம் பயிற்சிக்கு பிள்ளைகளை அவர்களது தாய்மார்கள் தான் அழைத்துச் செல்கிறார்கள். பயிற்சி முடியும் வரை அவர்கள் உடன் இருக்கிறார்கள், அந்த அளவுக்கு சிலம்பம் மீது மக்களுக்கு ஆர்வம் வந்துவிட்டது. இன்று தெருவுக்கு நூறு பேர் சிலம்பம் பயிற்சி பெறுகிறார்கள். இந்தியா அளவில் சிலம்பம் வளர்ந்து இருப்பதோடு, சிலம்பம் வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் அளவுக்கு இந்த கலை உயர்ந்திருக்கிறது.
படத்தின் கதையில் படை பலம், பணம் பலம், அதிகார பலம் அனைத்தையும் வெல்லுகின்ற ஆசானாக சிலம்பரசன் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருக்கிறார். எப்போ நான் கேமரா முன்பு நிற்பேன், எப்போது பேட்டி கொடுப்பேன் என்று ஏங்கியிருக்கிறேன், சத்தம் போட்டு கத்தியிருக்கிறேன். அப்போது என் மனைவி தான் ஊக்கம் கொடுத்து, ஒரு நாள் நீங்க, கேமரா முன்பு நிற்பீர்கள் என்று நம்பிக்கை கொடுப்பார், அவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்திற்காக பல பிரச்சனைகளை கடந்து வந்திருக்கிறேன். ஆனால், நாங்கள் நினைத்தது போல் படம் சிறப்பாக வந்திருக்கிறது. பத்திரிகையாளர்களும், ஊடகத்தினரும் நினைத்தால் தன எங்களை வெளியே தெரிய வைக்க முடியும், நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சிலம்பம் பற்றி பல விசயங்களை இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம், நீங்கள் அனைவரும் திரையரங்கில் படத்தை பார்க்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்