Home விமர்சனம் E 1 சினிமா விமர்சனம்

E 1 சினிமா விமர்சனம்

சமூக அவலங்கள் தொடர்கிற வரை சமூக அவலங்களை பின்னணியாக கொண்ட திரைப்படங்களின் வருகையை தவிர்க்க முடியாது போலிருக்கிறது. அந்த வரிசையில் புது வரவாக E 1.

‘ல்தகா சைஆ’ படத்தை இயக்கி நடித்த சாதா நாடார் – மோனிகா செலீனா தம்பதியே இந்த படத்தையும் இயக்கி நடித்திருக்கிறார்கள்.

அது பெரிய அப்பார்ட்மென்ட். அதில் ஒரு வீட்டில் ஒரு பெண் தன் பச்சிளங் குழந்தையோடு இருக்கிறார். அந்த வீட்டுக்குள் ஒரு ஆண், தான் கொலை செய்த ஒருவனின் டெட்பாடியுடன் நுழைகிறான். அவள் மிரள்கிறாள்.

இப்படி துவங்கும் கதையில், கொலை எதற்காக? குறிப்பிட்ட அந்த வீட்டுக்குள் டெட்பாடியை கொண்டு வந்தது ஏன்? என்பதை சஸ்பென்ஸ், டிவிஸ்ட் என்றெல்லாம் சுற்றி வளைக்காமல் சட்டென சொல்லி முடிக்கிறார்கள். படத்தின் நீளம் வெறும் 75 நிமிடங்கள் மட்டுமே.

தன் சின்னஞ்சிறு வயது மகளை சீரழித்தவன் மீதான கோபம், சீரழித்தவனை தேடிப் பிடித்து கொன்று தீர்ப்பதில் காட்டும் ஆக்ரோஷம், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுகிறவர்களை தொடர்ந்து வேட்டையாட வேண்டும் என்ற உறுதி என குறையில்லாத நடிப்பைத் தந்திருக்கிறார் சதா நாடார்.

வீட்டுக்குள் டெட்பாடி, அதை கொண்டு வந்தவன் கொலைகாரன். அப்படியொரு சூழ்நிலையில் ஏற்படும் பயம் பதட்டத்தை சரியான முகபாவங்களில் கொண்டு வந்திருக்கிறார் மோனிகா செலீனா.

காமவெறியனாக சுந்தரம், அந்த ராட்சசனை பரலோகத்துக்கு அனுப்புவதில் தீவிரம் காட்டுகிற நாயகனுக்கு தோள் கொடுக்கிற நண்பனாக பாண்டி இருவரும் தங்கள் கேரக்டர்களுக்கு போதுமான நடிப்பைத் தந்திருக்க,

பின்னணி இசையை அளவுக்கு அதிகமான அதிரடியில் வழங்கியிருக்கிறார் இ.ஜே.ஜான்சன். பாடல்கள் பரவாயில்லை ரகம்.

மிகச்சில காட்சிகள் மட்டுமே அவுட்டோரில் படமாக்கப்பட, பெரும்பாலான பகுதிகள் ஒரு வீட்டுக்குள்ளேயே நடந்து முடிகிறது. எம்.எஸ்.மனோகுமாரின் கேமரா கோணங்களில் காட்சிகள் நேர்த்தியாக திரையில் விரிகிறது. அத்தனையும் கீ லைட், ஃபில் லைட், ;பேக் லைட், ரிம் லைட் என எதுவுமில்லாமல் அவெய்லபிள் லைட்டிங்கிலேயே எடுக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

கதையின் போக்கு ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கு தாவுகிற வேகம் அதிகம். அந்தளவுக்கு ஷார்ப்பாக இருக்கிறது பரணிசெல்வத்தின் எடிட்டிங்.

கடுமையான தண்டனை தரவேண்டிய குற்றத்தில் ஈடுபடும் கொடூரன், அவனை பழிவாங்க களமிறங்கும் நாயகன் என பழக்கப்பட்ட கதையை மீண்டும் மீண்டும் பார்ப்பது சலிப்புதான். அதையெல்லாம் தாண்டி படத்தில், பெண் பிள்ளைகளுக்கு ‘குட் டச்’, ‘பேட் டச்’ என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பதைவிட ‘டோன்ட் டச்’ என்பதை வலியுறுத்த வேண்டும் என எடுத்துச் சொல்லியிருப்பது சமூகம் கவனிக்க வேண்டியது!

-சு.கணேஷ்குமார்

REVIEW OVERVIEW
E 1 சினிமா விமர்சனம்
Previous articleபருந்து சினிமா விமர்சனம்
Next articleவிஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 அக்டோபர் 9-ல் ரீ ரிலீஸ்!
e-1-tamil-movie-reviewசமூக அவலங்கள் தொடர்கிற வரை சமூக அவலங்களை பின்னணியாக கொண்ட திரைப்படங்களின் வருகையை தவிர்க்க முடியாது போலிருக்கிறது. அந்த வரிசையில் புது வரவாக E 1. 'ல்தகா சைஆ' படத்தை இயக்கி நடித்த சாதா நாடார் - மோனிகா செலீனா தம்பதியே இந்த படத்தையும் இயக்கி நடித்திருக்கிறார்கள். அது பெரிய அப்பார்ட்மென்ட். அதில் ஒரு வீட்டில் ஒரு பெண் தன் பச்சிளங் குழந்தையோடு இருக்கிறார்....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்