Home விமர்சனம் சிக்னல் அட் 11.30 சினிமா விமர்சனம்

சிக்னல் அட் 11.30 சினிமா விமர்சனம்

அதிரடி சம்பவங்கள் கலந்து கட்டிய சைகலாஜிகல் திரில்லர்.

மீடியாவில் பணிபுரியும் இளம்பெண் ஹாசினியைக் காணவில்லை. போலீஸில் புகார் கொடுக்கப்படுகிறது.

கதை இப்படி துவங்க, படம் பார்க்கும் நமக்கு ‘அந்த பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருப்பாளோ?’ என்ற சந்தேகம் உருவாகிறது. காரணம், தமிழ் சினிமா அப்படி நம் மனதை பழக்கி வைத்திருக்கிறது.

ஆனால், இந்த படம் டோட்டலி டிபரண்ட். கதையின் நாயகனே அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றிருக்கிறான்.

ஏன், எதற்காக?

இதே கேள்வியை ஹாசினியே அவனிடம் கேட்கிறாள்.

இதற்காகத்தான் என அவன் சொல்லும் காரணம் சரியாகத்தான் இருக்கிறது. நடந்துகொள்ளும் விதம்தான் மிரள வைக்கிறது.

எப்படி நடந்து கொள்கிறான்? ஏன் அப்படி நடந்து கொள்கிறான்? அவனிடமிருக்கும் ஹாசினிக்கு என்னவாகிறது?

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக கதையை நகர்த்தி, திக்திக் உணர்வுடன் படத்தை பார்க்க வைக்கிறார் இயக்குநர் மலர்விழி நடேசன்.

நாயகனாக சந்தோஷ் பிரதாப். காதல் மனைவி மீது காட்டும் அக்கறையில் பிரியத்தில் கவர்பவர், அவளை இழந்தபின் என்ன செய்கிறோ ஏது செய்கிறோம் என்கிற தெளிவில்லாத மனநிலைக்கு மாறும்போது அதற்கான முரட்டுத்தனத்தை சரியாக கொண்டு வந்திருக்கிறார்.

சந்தோஷ் பிரதாப்பின் காதலியாக, மனைவியாக நல்ல உயரமும் புஸுபுஸு தேகமும் உணர்வுகளைப் பொழியும் விழிகளுமாக புஜிதா பொன்னாடா. அழகாலும் அளவான நடிப்பாலும் மனதில் நிரம்புகிறார்.

ஹாசினியாக பவ்யா திரிகா. மீடியா பர்சனாக துடிப்பான செயல்பாடுகள், சந்தோஷின் பாதுகாப்பில் சிக்கித் திணறும்போது மிரட்சி என நடிப்பு கச்சிதம்.

மகளைக் காணாமல் தவிக்கிற அப்பாவாக ஜெயபிரகாஷ், அவள் பணிபுரியும் நிறுவனத்தின் டீம் லீடராக முனீஸ்காந்த் என இன்னபிறரும் பரபரப்பாக களமாடியிருக்கிறார்கள்.

கதை தருகிற பதட்ட உணர்வை கூடுதலாக்குகிறது டி இமானின் பின்னணி இசை. ராஜா பட்டாச்சார்ஜியின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் தரம்.

யாராலும் திருப்பித் தர முடியாத இழப்பைச் சந்திக்கிற நாயகன், தன்னைப் போல் யாரும் பாதிக்கப்படக்கூடாது என முடிவெடுப்பதெல்லாம் சரிதான். அந்த முடிவு விபரீதமாவதுபோல் அமைந்திருக்கிற திரைக்கதை, ‘ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருக்கு; பினிஷிங் சரியில்லையேப்பா’ என்கிற ஃபீலிங்கில் தள்ளிவிடுகிறது.

-சு.கணேஷ்குமார்

REVIEW OVERVIEW
சிக்னல் @11.30 சினிமா விமர்சனம்
Previous articleநிறம் சினிமா விமர்சனம்
Next articleடெலிவரி பாய் சினிமா விமர்சனம்
signal-11-30-movie-reviewஅதிரடி சம்பவங்கள் கலந்து கட்டிய சைகலாஜிகல் திரில்லர். மீடியாவில் பணிபுரியும் இளம்பெண் ஹாசினியைக் காணவில்லை. போலீஸில் புகார் கொடுக்கப்படுகிறது. கதை இப்படி துவங்க, படம் பார்க்கும் நமக்கு 'அந்த பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருப்பாளோ?' என்ற சந்தேகம் உருவாகிறது. காரணம், தமிழ் சினிமா அப்படி நம் மனதை பழக்கி வைத்திருக்கிறது. ஆனால், இந்த படம் டோட்டலி டிபரண்ட். கதையின் நாயகனே அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றிருக்கிறான். ஏன்,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்