Home விமர்சனம் ஆக்டோபஸ் வெப் சீரிஸ் விமர்சனம்

ஆக்டோபஸ் வெப் சீரிஸ் விமர்சனம்

சீரியல்போல் துவங்கி புயல் வேகத்தில் சீறிப் பாயும் எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர்.

தனித்தனி வீடுகள் நிரம்பிய குடியிருப்பு வளாகம். அதில் ஒரு வீட்டில் ஒரு தம்பதி குடியேறுகிறார்கள். கணவன் குடிகாரன்; சைக்கோ குணம் கொண்டவன். மனைவியை விதவிதமாக துன்புறுத்துகிறான். அவள் மீது அக்கம் பக்கத்தினர் இரக்கப்படுகிறார்கள்; அவளுடன் கலந்து பழகி நெருக்கமாகிறார்கள். கொஞ்ச நாளில் அவள் காணாமல் போக, பழகியவர்களுக்கு சந்தேகம் வருகிறது. போலீஸை அழைக்கிறார்கள். விவகாரம் கோர்ட் வரை போகிறது. காணாமல் போன பெண்ணுக்கு என்னவானது என்பதுதான் கிளைமாக்ஸா என்றால், அது மட்டுமில்லை அதையும் தாண்டி அதிர்ச்சி தரும் மேட்டர்கள் வரிசை கட்டுகிறது… இயக்கம் ‘கூசே முனுசாமி வீரப்பன்’ தொடரை உருவாக்கி கவனம் ஈர்த்த ஜெயச்சந்திர ஹாஸ்மி

கிரைம் பாட்காஸ்ட் நடத்தும் துடிப்பான பெண்ணாக பிக்பாஸ் அர்ச்சனா. தன் கண்ணெதிரில் நடக்கும் அநியாய அக்கிரமங்களைக் கண்டு கொதிப்படைகிற கேரக்டருக்கு உணர்ச்சிபூர்வமான நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார்.

கணவன் என்னதான் கொடுமை செய்தாலும் அதெல்லாம் தனது தவறுக்கான தண்டனையாக எடுத்துக் கொண்டு வலிகளை அனுபவிக்கிற சித்து குமரேசன் முதல் மூன்று எபிசோடுகளைத் அளவான நடிப்பால் தாங்கியிருக்கிறார். அஸ்வின் குமார் சைக்கோவாகவே மாறியிருக்கிறார். இருவரும் ஒரு சில எபிசோடுகளுக்குப் பிறகு வேறோரு சம்பவம் செய்வது கதையிலிருக்கிற ட்விஸ்ட்.

வினோத் கிஷன் – கலைவாணி பாஸ்கர் ஜோடியின் காதல் அத்தியாயங்கள் தென்றலாய் இதம் பரப்புகிறது. கலைவாணி பாஸ்கருக்கு நேரும் முடிவு கதையோட்டத்தின் கனமான தருணம்.

குடியிருப்புவாசிகளாக வருகிறவர்களுக்கு பெரியளவில் முக்கியத்துவமிருக்கிறது. அர்ச்சனாவின் அப்பாவாக வருகிறவர் தனித்து தெரிகிறார்.

பரபரக்கும் கிரைம் திரில்லருக்கு வேகமூட்டுகிறது தீபன் சக்ரவர்த்தியின் பின்னணி இசை. ராம் பாண்டியனின் எடிட்டிங் ஷார்ப். கண்ணா ஆரின் ஒளிப்பதிவு தரம்.

பவர்ஃபுல்லான கதைக்கு அதைவிட பவர்ஃபுல்லான திரைக்கதை அமைத்திருப்பதால் அப்படியும் இப்படியும் அசையாமல் பார்த்தாக வேண்டிய கட்டாயம் உருவாகிறது. வெப் சீரிஸ்களை அப்படி பார்க்க விரும்புகிற அத்தனைப் பேரின் ஆர்வத்துக்கும் நவம்பர் 27 முதல் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகும் ஆக்டோபஸ் தீனி போடும்!

-சு.கணேஷ்குமார்

 

REVIEW OVERVIEW
ஆக்டோபஸ் வெப் சீரிஸ் விமர்சனம்
Previous articleமார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியீடு!
octopus-web-series-reviewசீரியல்போல் துவங்கி புயல் வேகத்தில் சீறிப் பாயும் எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர். தனித்தனி வீடுகள் நிரம்பிய குடியிருப்பு வளாகம். அதில் ஒரு வீட்டில் ஒரு தம்பதி குடியேறுகிறார்கள். கணவன் குடிகாரன்; சைக்கோ குணம் கொண்டவன். மனைவியை விதவிதமாக துன்புறுத்துகிறான். அவள் மீது அக்கம் பக்கத்தினர் இரக்கப்படுகிறார்கள்; அவளுடன் கலந்து பழகி நெருக்கமாகிறார்கள். கொஞ்ச நாளில் அவள் காணாமல் போக, பழகியவர்களுக்கு சந்தேகம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்