பா.ரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தினேஷ். பெரியளவில் ஹிட்டான அந்த படத்தின் பெயர் தினேஷுடன் இணைந்து கொண்டது. தொடர்ந்து மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதை தொடர்ந்தார்.
உலக அளவில் பாராட்டுக்களை குவித்த ‘விசாரணை’, ‘குக்கூ,’ பெரும் வெற்றியை குவித்த ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘திருடன் போலீஸ்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ உள்ளிட்ட படங்கள் மூலம் தன் நடிப்புத் திறமையால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடம் ஏற்கும் தினேஷ் தற்போது, ‘ஜே பேபி’, ‘தண்டகாரண்யம்’ படங்களில் நடித்து முடித்துள்ளார். ‘கருப்பு பல்ஸர்’, ‘லப்பர் பந்து’ படங்களின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பா. ரஞ்சித்தின் புதிய படத்திற்காக மிக வித்தியாசமான தோற்றத்துக்கு தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். அவரது புதிய லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.