திகில் ஒலிக்கு ‘பீட்சா 3′ படத்தில் 200 வருட பழமையான பியானோவிலிருந்து புது வடிவம் கொடுத்த இசையமைப்பாளர் அருண் ராஜ்!

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிட்சா 3′ திரைப்படத்தில் திகில் உணர்வைக் கொடுக்கும் விதத்தில் ஒலிக்கலவை செய்து கவனிக்க வைத்தவர் இசையமைப்பாளர் அருண் ராஜ். 200 வருட பழமையான உடைந்த பியானோவிலிருந்து அப்படியான இசையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க தகவல்.

அருண்ராஜ் நாட்டின் மிகப் பழமையான ‘மியூசி மியூசிகல்ஸ்’ என்ற ஷோரூமிலிருந்து அந்த பியானோவை கண்டடைந்தார். மறக்கப்பட்ட அந்த அற்புத கருவிக்கு புத்துயிர் அளிக்க முடிவெடுத்தார். ஆனால், அது ஒலிப்பதிவு கூடத்துக்குள் நுழையாத அளவுக்கு பெரிதாக இருந்தது. அருண் ராஜும் அவரது குழுவும் அந்த பழமை வாய்ந்த பியானோவை பெரு முயற்சிக்குப் பிறகு ஒரு பெரிய வளாகத்திற்குக் கொண்டு வந்து, பல புதிய உத்திகளைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்தனர். அதன் பலனாக ஒலிகள் தனித்துவம் வாய்ந்த பல இசைக் கோர்வைகளாக வடிவெடுத்தன.

அருண்ராஜின் இசைத் தேடல் பழமை வாய்ந்த இசைக்கருவியை கண்டுபிடித்ததோடு நிற்காமல் பாடகர் குழுவரை நீள்கிறது. முன்பின் அறிமுகம் இல்லாத, அதிலும் பெரிதாய் பாடிய அனுபவம் இல்லாத வெளிநாட்டு பாடகர்களை பாட வைத்தது அருண்ராஜின் பெரும் சாமர்த்தியம். குழுப்பாடல் பதிவிற்கு வழக்கித்திற்கு மாறான இந்த புதிய பாடகர்களின் சேர்க்கை தனித்துவம் வாய்ந்த இசையைக் கொண்டு வந்தது.

ஓர் அமைதியற்ற பரிமாணமுடைய இந்த திகில் ஒலி படம் முழுதும் பயன்படுத்தப்பட்டது. இந்த ஒலி அடங்கிய பிறகும் திகிலின் சாரம் காதில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. இப்படத்தில் அருண் ஒரு பின்னணி இசைக்குழுவை வைத்து வித்தியாசமான பலவகை ஒலி தாக்கங்களையும் (Sound Effects) உருவாக்கியுள்ளார். அந்த ஒலி சுரங்களால் அறியப்பட்ட வழக்கமான மெல்லிசை குறிப்புகளுக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன.

பீட்சா 3-ல் வழக்கத்திற்கு மாறான கருவிகள், எதிர்பாராத அதிர்வுகள் மற்றும் ஒருங்கிணைக்கப்படாத பின்னணி இசைக்குழு ஆகியவற்றின் மூலம், திகில் சினிமாவில் இசையமைப்பு மூலம் தனித்துவம் காட்டியிருந்தது பாராட்டுக்களை குவித்து வருகிறது. அந்த பாராட்டும் ஊக்கமும் அவரது இசைத் தேடலை கூடுதலாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here