இந்தியாவில் முதன்முறையாக சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லராக தயாராகியுள்ள படம் ‘அமீகோ.’
சாந்தினி தமிழரசன் கதையின் நாயகியாக நடிக்க, அறிமுக இயக்குநர் பி. பிரவீண் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் அர்ஜுன் சோமையாஜுலா, சுவிதா ராஜேந்திரன், பிரவீன் இளங்கோ, வத்சன் சக்கரவர்த்தி, வெக்கே, மனிஷா ஜஷ்னானி, பிரக்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அமீகோ என்றால் நண்பர் என்று பொருள். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”இந்திய திரையுலகை திரும்பிப் பார்க்க வைக்கும் புதுமையான படைப்பாக இந்த படம் உருவாகியிருக்கிறது. டிஜிட்டல் உலகின் மறுபக்கம் திகிலூட்டும் அம்சங்களுடன் நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் தொடர்பான அத்துமீறலில் சிக்கும் நண்பர்கள் குழுவை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
ஊடகத் துறையில் பணியாற்றும் நண்பர்கள் குழு ஒரு மர்ம மனிதனின் பேச்சில் கவரப்பட்டு, ஆபத்தை உணர்ந்தே ஆன்லைன் விளையாட்டில் மூழ்குகிறார்கள். அதையடுத்து மர்ம மனிதன் வீசிய வலையில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை” என்றார். படம் ஆகஸ்ட் மாதம் ‘விக்கி பிலிம்ஸ்’ வெளியீடாக வருகிறது.
படக்குழு:-
ஒளிப்பதிவு:வாஞ்சிநாதன் முருகேசன்
இசை: ‘அயலி’ புகழ் ரேவா
கலை இயக்கம்: ஏழுமலை ஆதி கேசவன்
படத்தொகுப்பு: பிரதீப் சந்திரகாந்த்
தயாரிப்பு: பிரத்யாக்ரா மோசன் பிக்சர்ஸ் பி.கிரிஜா
இணை தயாரிப்பு: ஜீத்து பிரபாகரன்
மக்கள் தொடர்பு_ சிவகுமார்