மிரட்டல் அர்ஜெய், அசத்தல் லிங்கா நடிக்கும் கேங்ஸ்டர் ஃபேண்டஸி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பு!

அர்ஜெய், லிங்கா இருவரும் கதை நாயகர்களாக நடிக்கும் கேங்ஸ்டர் ஃபேண்டஸி படத்தை ஸ்மால் ஃபாக்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக இயக்குநர் கௌதம் செல்வராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

படத்தில் ஜெயக்குமார், சரத் ரவி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எஃப் ஐ ஆர், இன்ஸ்பெக்டர் ரிஷி படங்களின் இசையமைப்பாளர் அஸ்வத் இசையமைக்கிறார். பிரேண்டன் ஷசாந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தெறி, சுல்தான், அண்ணாத்த, சண்டக்கோழி 2, எமன், அன்பறிவு, தேள் உள்ளிட்ட படங்களில் மிரட்டியவர் அர்ஜெய்.

சேதுபதி படத்தில் முக்கிய வேடத்திலும், அதே கண்கள், ஹர ஹர மஹாதேவகி, கருப்பன், கஜினிகாந்த், சிந்துபாத், மிக மிக அவசரம், வி1, பெங்குயின், அனபெல் சேதுபதி, பரோல், டிஎஸ்பி என பல்வேறு படங்களிலும் அயலி, உடன்பால் உள்ளிட்ட வெப் சீரிஸ்களிலும் அசத்தியவர் லிங்கா.

வெற்றி பெற்ற பல படங்களில் நடித்த அர்ஜெய், லிங்கா கூட்டணி தற்போது புதிய படத்தில் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here