யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் அர்ஜுனன் பேர் பத்து திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திரங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ரவி மோகன் ஆகியோர் இன்று சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டனர்.
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
யோகிபாபு நடிக்கும் 300வது படம் இது.
தமிழகத்தில் இடி மின்னலுக்கு பயப்படும் மக்கள் அர்ஜூனா, அர்ஜுனா என்று சொல்வதைப் போலவே மதுரையை சுற்றி உள்ள தென் மாவட்டங்களில் வாழும் மக்கள் அர்ஜுனன் பேர் பத்து என்று சொல்வது வழக்குச் சொல்லாக உள்ளது.
இந்த அர்ஜுனன் பேர் பத்து திரைப்படம் வழக்கமான யோகி பாபு படமாக இல்லாமல் பழைய வாகனங்கள் விற்பதில் நடக்கும் மோசடிகள் பற்றியும் அந்த மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளைப் பற்றியும் இனி பழைய வாகனங்களை வாங்கவிருக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும்.. உண்மை சம்பவத்தை மையமாக வைத்தே அர்ஜுனன் பேர் பத்து திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகியுள்ளது..
இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உணர்வுபூர்வமாக உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ரா.ராஜ் மோகன்.
யோகி பாபு யதார்த்தம் கலந்த உணர்ச்சி பூர்வமான கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். கதையின் நாயகியாக அனாமிகா மகி அறிமுகமாகிறார். காளி வெங்கட், அருள்தாஸ், அயலி மதன், சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, சவுந்தர்யா, சென்ராயன், ஹலோ கந்தசாமி, பாவா லட்சுமணன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இயக்குநர் லெனின் பாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

