Home பொது அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வைக்கு  ரசிகர்களிடம் பெருகும் வரவேற்பு… தயாராகும்...

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வைக்கு  ரசிகர்களிடம் பெருகும் வரவேற்பு… தயாராகும் இரண்டு புதிய போஸ்டர்கள்!

அர்ஜுன் தாஸ், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கதைக்களத்தை மேலும் வெளிப்படுத்தும் வகையில் இன்னும் இரண்டு புதிய போஸ்டர்களை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது. தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி பேனரின் கீழ் ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தை வழங்குகிறார். மேலும், நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தயாரிப்பதில் ஆர்வமுள்ள ரெடாக்டட் ஸ்டுடியோஸின் ஷான்ஜன் ஜி, இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.
புதுமையான கதைகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் கே.எஸ். சினிஷ். இயக்குநராக ‘பலூன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் தயாரிப்பாளராக ‘டிக்கிலோனா’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ போன்ற படங்களை தயாரித்துள்ளார். இந்த வரிசையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் பொழுதுபோக்கு திரைப்படமாக ‘சூப்பர் ஹீரோ’ உருவாகியுள்ளது.
வில்லனாக நடிப்பில் மிரட்டி, தற்போது கதாநாயகனாகவும் வெற்றி ஈட்டி வரும் அர்ஜுன் தாஸ், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, தனது சிறப்பான நடிப்பால் கவனம் பெற்றுவரும் தேஜு அஷ்வினி நடித்துள்ளார். மேலும், ’சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தில் வில்லனாக சாண்டி மாஸ்டர் நடித்துள்ளார். ‘லோகா – சாப்டர் ஒன்’, சமீபத்தில் வெளியான ‘பரிமளா & கோ’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்ற சாண்டி மாஸ்டர் மற்றும் அர்ஜுன் தாஸ் காம்பினேஷன் படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் ஒன்று.
இந்த திரைப்படத்தின் மூலம் விக்னேஷ் வேணுகோபால் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர், ‘பலூன்’ திரைப்படத்தில் கே.எஸ். சினிஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். கதையின் மீதான நம்பிக்கை, தெளிவான திட்டமிடல் என விக்னேஷின் அணுகுமுறை படக்குழுவினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. புதிய திறமைகளை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வரும் கே.எஸ். சினிஷ், இதற்கு முன்பு ‘டிக்கிலோனா’ மூலம் கார்த்திக் யோகியையும், தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படம் மூலம் இயக்குநர் ராமையும் இயக்குநர்களாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். தெலுங்கில் ‘குஷி’, மலையாளத்தில் ‘ஹிருதயம்’, தமிழில் ‘ஒன்ஸ் மோர்’ உள்ளிட்ட படங்களில் மனதை வருடும் இசை கொடுத்த ஹிஷாம் அப்துல் வஹாப் இந்தப் படத்திற்கும் இசையமைத்திருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்