‘தமிழக அரசு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை தமிழ் மொழியில் கொண்டுவர முன்வந்தால் தேவையான உதவி செய்வோம்! -மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி

சென்னையில் நடைபெற்ற விழாவொன்றில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘தமிழக அரசிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். உலகிலேயே பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. தமிழ் மொழியின் இலக்கணம் உலகிலேயே சிறந்ததாக உள்ளது மற்றும் பழமையான இலக்கணங்களில் ஒன்றாக உள்ளது.

 

தமிழ் மொழியை மேம்படுத்துதல் மற்றும் வளப்படுத்துதல் நமது நாட்டின் முக்கிய பொறுப்பு ஆகும். நாட்டின் பல்வேறு மாநிலங்கள் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்விகளை தொடங்கியுள்ளன.

தமிழக அரசும் மருத்துவக்கல்வியை முழுமையாக தமிழ் மொழியில் கற்பிக்க ஆரம்பித்தால் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ அறிவியலை புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.

இது அவர்கள் தங்களது தாய்மொழியில் ஆராய்ச்சியில் ஈடுபட உதவும். உங்களையும் உங்கள் திறன்களையும் மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் மருத்துவ அறிவியலுக்கு பங்களிக்க முடியும். தமிழ் வழி மாணவர்களுக்கு 1350 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் AICTE சமீபத்திய தரவுகளின்படி 85 மாணவர்கள் மட்டுமே தமிழ் மொழியில் படிக்கின்றனர். தமிழ் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்குவதில் தமிழக அரசு கவனம் செலுத்தி நல்ல பலன்களைப் பெற்றால் அது தமிழ் மொழிக்கு பெரும் சேவையாக இருக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here