லோகேஷ் கனகராஜ் உட்பட திரைப்பிரபலங்கள் 9 பேர் வெளியிட்ட ‘ரங்கோலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

புதுமுகங்களின் நடிப்பில் இப்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘ரங்கோலி.’


வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாபு ரெட்டி & ஜி.சதீஷ்குமார் தயாரித்துள்ள இந்த படத்தின், ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், நடிகர் சதீஷ் நடிகை வாணி போஜன், நவீன் சந்த்ரா, கார்த்திக் ரத்னம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படம்.
பள்ளி மாணவர்கள் ஒன்றாக கூடி நிற்கும் இபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் பலரது பள்ளி ஞாபகங்களை கிளறுவதோடு, படம் மீது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகாமகிறார். பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடப்பா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.
தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் தெரியவரும்.

படக்குழு:- இசை – சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு – மருதநாயகம்
எடிட்டிங் – ஜி.சத்யநாராயணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here