ரன்பீரின் ‘அனிமல்’ ரசிகர்களை மிரள வைக்கும்! எதிர்பார்ப்பை தூண்டும் ஃபர்ஸ்ட் லுக்!

தான் இயக்கிய ‘அர்ஜுன் ரெட்டி‘ என்ற முதல் படமே பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுக்க, இந்தியாவே திரும்பி பார்த்தது சந்தீப் ரெட்டி வங்காவை. அந்த படத்தின் இந்தி ரீமேக்கான ‘கபீர் சிங்’ மூலம் பாலிவுட்டை அதிர வைத்த சந்தீப் ரெட்டி வங்கா தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர் நடிப்பில் ‘அனிமல்’ படத்தை இயக்குகிறார்.
அவரது இயக்கத்தில் ரன்பீர் முதன்முறையாக தீவிரமான ஆக்‌ஷன் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படம் இந்திய திரைப்பட ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தரும் படைப்பாக, மாறுபட்ட ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகிறது.

ரன்பீருக்கு ஜோடியாக, நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, நடிகர் அனில் கபூர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். ரன்பீர் கபூர் – சந்தீப் ரெட்டி வாங்காவின் மாறுபட்ட காம்பினேஷனில் பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் புத்தாண்டு தினத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில், அனிமல்  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

அதில் நீண்ட தலைமுடி மற்றும் அடர்த்தியான தாடியுடன், கூர்மையான கோடரியுடன் இருக்கும்  ரன்பீரின் தோற்றம் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. அதுவே படம் ரசிகர்களை மிரள வைக்கும் அழுத்தமான படைப்பாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.

இந்தியாவின் மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்காற்றும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

படக்குழு:
தயாரிப்பாளர்கள்: பூஷன் குமார், பிரனய் ரெட்டி வங்கா
தயாரிப்பு நிறுவனம் : டி சீரிஸ், பத்ரகாளி பிக்சர்ஸ்
மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் –  சிவா ( AIM )  தமிழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here