சின்னத்திரையிலிருந்து சினிமா! புத்தாண்டில் புதிய பயணம் தொடங்கும் வி ஜே அர்ச்சனா

மிகச்சில வருடங்கள் முன் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக (VJ) தன் கலைப் பயணத்தை தொடங்கிய அர்ச்சனா, சீரியல் சினிமா என சரசரவென முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

அவரைப் பற்றி..

பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா 2019ல் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன் கலைப் பயணத்தைத் தொடங்கினார்.

அதன்பிறகு விஜய் டி.வி. ‘ராஜா ராணி-2’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் துறுதுறு நடிப்பால் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து  ‘லவ் இன்சூரன்ஸ்’, ‘ட்ரூத் ஆர் டேர்’ ஆகிய குறும்படங்களில் நடித்தார். ‘எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி’ என்ற இணையத் தொடரிலும் (Web series) நடித்துள்ளார்.

சமீபத்தில் ’ஸோனி மியூசிக்’, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில் வெளியிட்ட ஒரு நிமிடப் பாடலான ‘தமாத்துண்டு’ எனும் பாடலில் நடித்துள்ளார். இந்த பாடல் சமூக வலைதளங்களில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது!

இவர் தன்னைப்பற்றி கூறும்போது, நான் தமிழ்ப் பெண். இயக்குநர்கள் சொல்வதை உள்வாங்கிக்கொண்டு சிறப்பான முறையில் நடிப்பை வெளிப்படுத்துவதால் நான் இயக்குநர்களுக்குப் பிடித்த நடிகையாக இருக்கிறேன்” என்கிறார்.சினிமாவில் கதாநாயகியாக நடித்து சிறந்த நடிகையாக புகழ்பெற வேண்டும் என்பது அர்ச்சனாவின் ஆசை. அதன் முதற்கட்டமாக ‘டிமாண்டி காலனி – 2’ படத்தில் கதாநாயகன் அருள்நிதிக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பை பெற்று தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார்.

அது பற்றி பேசிய அர்ச்சனா, ”தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என பிற மொழிப் படங்களிலும் நடிக்க ஆர்வமாகஇருக்கிறேன். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்” என்றார் உறுதியாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here