தலைப்பிலேயே மிரட்டல்! ஆக்ஷன் கிங் அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கிரைம் திரில்லராக புதிய படம்!

 

ஆக்சன் கிங் அர்ஜூன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர் படத்திற்கு தீயவர் குலைகள் நடுங்க என தலைப்பிடப்பட்டுள்ளது. GS ARTS தயாரிப்பாளர் G. அருள் குமார் தயாரிப்பில், தினேஷ் இலெட்சுமணன் இயக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை, கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ்கிறது. அதனை விசாரிக்கும் பின்ணனியில் அழுத்தமான க்ரைம் -த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரம் மைய கதாப்பாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது. எந்த வித கதாப்பாத்திரம் தந்தாலும் தனது திறமையான நடிப்பின் மூலம் அசத்தும், நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்சன் கிங் அர்ஜூன் இன்வெஸ்டிகேடிவ் ஆபிஸராக நடிக்கிறார். ரசிகர்களுக்கு புது அனுபவம் தரும் திரில்லர் அனுபவமாக “தீயவர் குலைகள் நடுங்க” திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்ப்டத்தின் தொழில் நுட்ப குழுவில் பரத் ஆசீவகன் (இசை), லாரன்ஸ் கிஷோர் (எடிட்டர்), சரவணன் அபிமன்யு (ஒளிப்பதிவாளர்), அருண் சங்கர் துரை (கலை இயக்குனர்), கணேஷ் (ஸ்டண்ட் மாஸ்டர்), சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு )பணிகளை செய்துள்ளனர். ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, ராம்குமார் சிவாஜிகணேசன், GK.ரெட்டி, பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் இன்னும் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை, GS ARTS சார்பில் தயாரிப்பாளர் G.அருள் குமார் தயாரிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here