இந்த படத்தில் என்னை கொஞ்சம் கூட காமெடி செய்ய விடவில்லை! -‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் பேச்சு

சந்தானம் நடிப்பில், இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்.’ ஏஜென்ட் ஸ்ரீவஸ்தவா’ என்ற தெலுங்குப் படத்தின் மிகச்சிறந்த தழுவலாக இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தை ஒரு வெற்றிகரமான தொடராக (franchise) முன்னெடுத்து செல்லவும் தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது. இப்படம் நவம்பர் 25 திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள நிலையில் 19.11. 2022 அன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.நிகழ்வில் இயக்குநர் மனோஜ் பீதா, “இந்த படத்தில் சந்தானம் காமெடி செய்யவில்லை. தன்னை முழுமையாக மாற்றிசீரியஸான கதாபத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அவரும் புகழும் வரும் காட்சிகளில் அவர் வழக்கமான காமெடிகள் செய்யாமல் தன்னை கட்டுபடுத்தி கொண்டு, படத்தின் கதாபாத்திரமாக மாறியுள்ளார். இது அவருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் புதிதாக இருக்கும்” என்றார்.நடிகர் சந்தானம் “ஏஜெண்ட் கண்ணாயிரம் படம் ஒரு ரீமேக் படமாக இருந்தாலும், இயக்குநர் அதில் பல மாற்றங்களை செய்துள்ளார். தெலுங்கு ஒரிஜினல் படத்தில் ஒரு உணர்வுபூர்வமான அம்மா- மகன்  கதை இருக்கும். அதை அந்த படத்தில் முழுமையாக பயன்படுத்தவில்லை, அதை இந்த படத்தில்உருவாக்கியிருக்கிரார். அதனால் இந்த படம் புதுவிதமாக இருக்கும். என்னை கொஞ்சம் கூட காமெடி செய்ய விடவில்லை. அதுபோக இந்த படத்திற்காக குதிரை ஏற்றம் கற்றுகொண்டேன், படத்தில் சில ஆக்சன் காட்சிகளை இயக்குனர் வைத்துள்ளார். அது அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ரியா சுமன், புகழ் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர், அவர்கள் அனைவரும் ஒரு புதுவிதமான கதாபத்திரமாக தோன்றுவார்கள். யுவன் சங்கர் ராஜா இசை இந்த படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது” என்றார்.

படம் பற்றி…

சந்தானம் கதாநாயகனாகவும், ரியா சுமன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, E ராம்தாஸ், இந்துமதி, மதன் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆதிரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்கிறார்கள், அஜய் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ராஜேஷ் (கலை), பிரசன்னா JK (நிர்வாகத் தயாரிப்பாளர்), ஸ்டன்னர் சாம் (ஸ்டண்ட்ஸ்), பல்லவி சிங் (ஆடை வடிவமைப்பு), மணி வர்மா K (புரடக்சன் கண்ட்ரோலர்), கணேசன் D (தயாரிப்பு நிர்வாகி), வேணு (ஒப்பனை), வாசு (காஸ்ட்யூமர்), ராஜு (ஸ்டில்ஸ்), பிரதூல் NT (பப்ளிசிட்டி டிசைன்ஸ்), T உதய் குமார் (ஒலி கலவை), Sync Cinema (ஒலி வடிவமைப்பு), நாக் ஸ்டுடியோ (DI), பிரசாத் சோமசேகர் (கலரிஸ்ட்), மற்றும் சரவணன் (VFX) ஆகியோர் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here