அரண்மனை முதல் பாகம் பார்த்து சொன்ன கருத்தை மூன்றாம் பாகத்துக்கும் சொன்னார் உதயநிதி! -அரண்மனை 3′ பட பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் சுந்தர். சி மகிழ்ச்சி

அரண்மனை முதல் இரண்டாம் பாகங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3  திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஆர்யா, ராஷிகண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க,விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா ,மனோபாலா,சம்பத், சாக்‌ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அவ்னி  சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்துள்ள இந்த படம் வரும் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு 10. 10. 2021 அன்று நடைபெற்றது.

நிகழ்வில் நடிகர் ஆர்யா, இந்த படத்தில் நடிப்பதற்காக சுந்தர்.சி சாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவரை சந்தித்தேன் இந்த படத்தில் நடிப்பது பற்றி அவரிடம் சொன்னபோது பேய் படத்தில் எனக்கு எப்படி நடிப்பது என்று தெரியவில்லையே என்று கூறினேன். அது மிகவும் ஈசிதான் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். இப்படத்தில் விவேக்  சாருடன் நடித்தது  மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் பயணித்த அந்த 40 நாட்கள் மறக்க முடியாதவை. நான் அவரது மிகப்பெரிய ரசிகன். இந்த படத்தில் நடித்த அனைவருமே மிக சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தில்   பாடல்கள் மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார் சத்யா .இப்படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் உதயநிதி அவர்களுக்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். படம் திரையரங்குகளில் இப்படம் வெளியாவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

இயக்குனர் சுந்தர் சி, நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . அரண்மனை பாகங்கள் இரண்டும் நீங்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவுடன் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. எல்லோரும் சொல்வார்கள் அரண்மனை படத்தை ஈசியாக எடுத்து விட்டீர்கள் என்று ஆனால் அது மிகவும் கஷ்டம். இந்த மாதிரியான படங்களை  மக்கள் விரும்புமாறு கொடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான் .ஏற்கனவே உள்ள விஷயங்களை விட கொஞ்சம் வேறுபட்டதாக இருக்க வேண்டும். அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களுமே நல்ல வசூலையும் வெற்றியும் தந்தது. ஆனால் உடனடியாக அதன் அடுத்த பாகத்தை எடுக்க முடியாது .அதற்கான கதையும் .நடிகர்கள் ,தொழில்நுட்ப குழுக்களும் அமைந்தால் மட்டுமே சாத்தியம்.

மற்ற நடிகர்களை போல் இல்லாமல் நடித்து கொடுத்து செல்லாமல் பிசினஸ் ரீதியாக எனக்கு உதவியாக இருந்தார் ஆர்யா. அரண்மனை படம் என்றாலே நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திலும் ஆண்ட்ரியா ராஷி கண்ணா ,சாக்ஷி அகர்வால் எல்லாருக்குமே முக்கிய கதாபாத்திரம் தான்.

அரண்மனை பாகம் 1 உதயநிதி அவர்கள் வெளியிட்டார் .தற்போது அரண்மனை 3 திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் வெளியிடுகிறார். இந்த படத்தை பார்த்த ஒரே நபர் உதயநிதி அவர்கள் மட்டும்தான். அரண்மனை 1 படத்தை பார்த்து கண்டிப்பாக வெற்றி பெறும் என்று சொன்னவரும் அவர்தான் .தற்போது அரண்மனை 3 படத்தை பார்த்துவிட்டு அருமையாக இருக்கிறது என்று சொன்னவரும் அவர்தான். என்னுடைய படங்கள் எல்லாமே கமர்சியல் படம்தான் .படத்தை பார்க்கின்ற சிறுவர்கள் பொதுமக்கள் தாய்மார்கள் அனைவருமே கவலையை மறந்து ரசிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். அரண்மனை இரண்டு பாகங்களை விட அரண்மனை 3 பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இசையமைப்பாளர் சி .சத்யா, இந்த படம் எனக்கு 25 வது படம். இசையமைப்பாளராக இசை அமைத்துள்ளேன். இந்த திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைப்பதில் எனக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டது.20 நாட்களில் முடிக்குமாறு என்னை இயக்குனர் கேட்டுக் கொண்டார். ஆனால் இந்த லாஃடௌன் எனக்கான நாட்களை அதிகப்படுத்தியது. அதிக நாட்கள் எடுத்துக்கொண்டு சிறப்பாக படத்திற்கு இசை அமைத்துள்ளேன். அரண்மனை பட  மற்ற பாகங்களைவிட இந்த மூன்றாம் பாகத்தில் எமோஷனல் சீன்கள் அதிகமாக இருக்கின்றன” என்றார்.

நடிகர் மனோபாலா, குஜராத்தில் கிட்டத்தட்ட 40 நாட்கள் மேலாக தங்கியிருந்து படப்பிடிப்பு முடித்தோம். மறக்க முடியாத நினைவுகள். காலையில் 7 மணிக்கு சூட்டிங் சென்றுவிட்டு இரவு பத்து மணிக்கு திரும்புவோம் . படப்பிடிப்பு போவதே தெரியாது. இதில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது விவேக் சாருடன் நடித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை அவரின் இழப்பு வருத்தத்தை அளிக்கிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here