மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் ‘பைசன் காளமாடன்.’ துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் துவங்கியது படப்பிடிப்பு.

துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடிக்க, மாரி செல்வராஜ் இயக்கும் படம் ‘பைசன் காளமாடன்.’ படத்தில் லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் நடிக்கின்றனர்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 6; 2024) தொடங்கியது.

இந்த படம் அமைதிக்கான பாதையைத் தேடிய, ஒரு போர்வீரனின் கதையை கண்களுக்கு விருந்தாகக் கொண்டு வரவிருக்கிறது. மனித ஆத்மாவின் வெற்றி வேட்கையைப் பேசும் கலைப்படைப்பாக, மிக உன்னதமான அனுபவத்தை வழங்கவுள்ளது.

பரியேறும் பெருமாள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்திற்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தயாரிப்பாளர் பா ரஞ்சித்துடன் இணையும் படம் இது

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, தொடர்ந்து திரைப்படங்களை வழங்கவுள்ள நிலையில, முதல் தயாரிப்பாக பைசன் உருவாகிறது.

படக்குழு:
இசை: நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு: எழில் அரசு கே
எடிட்டிங்: சக்திகுமார்
கலை இயக்கம்: மூத்த கலை இயக்குநர் குமார் கங்கப்பன்
ஸ்டண்ட்: திலீப் சுப்பராயன்
ஆடை வடிவமைப்பாளர்: ஏகன் ஏகாம்பரம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here