Home Uncategorized நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவரும் பாரத் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! அருண் விஸ்வாவின்...

நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவரும் பாரத் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் தயாரிக்கிறது.

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த வகையில் தயாரிக்கும் அடுத்த படத்தில், நகைச்சுவை கலந்த நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாரத் கதாநாயகனாக நடிக்கிறார். ‘குடும்பஸ்தன்’ படத்தில் சிறப்பான நடிப்பிற்கு பாராட்டப்பட்ட நடிகை சான்வி மேக்னா, கதாநாயகியாக நடிக்கிறார். பாலசரவணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஹரிஹரசுதன் அழகிரி எழுதி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. முழுப் படப்பிடிப்பும் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 45 லிருந்து 50 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் கவனிக்க, கலை இயக்கத்தை சி.எஸ். பாலச்சந்தர் மேற்கொள்கிறார். உடை வடிவமைப்பை கிருத்திகா சேகர் கவனித்து வருகிறார்.

‘மாவீரன்’, ‘3BHK’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் மூன்றாவது தயாரிப்பான ‘சீயான் 63’ படத்தையும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்