காசியில் நடக்கும் காதல் காவியமாக ‘பனாரஸ்.’ நவம்பர் 4-ம் தேதி ரிலீஸ்!

புதுமுக நடிகர் ஜையீத் கான், பாலிவுட் நடிகை சோனல் மோன்டோரியோ முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் காதல் காவியம் ‘பனாரஸ்.’

இந்த படம், நவம்பர் 4-ம் தேதி கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரும், பல விருதுகளை வென்ற படைப்பாளியுமான ஜெயதீர்த்தா இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜையீத் கான் – சோனல் மோன்டோரியோவோடு தேவராஜ், அச்யுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

புனித தலமான காசியை கதைக்களப் பின்னணியாக கொண்டு இன்னிசையுடன் கூடிய காதல் காவியமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். என். கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here