டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் 92-வது பிறந்தநாள் கொண்டாட்டம்! மிருதங்க வித்வான் டி.கே. மூர்த்தி, கடம் வித்வான் விக்கு விநாயக ராம், வயலின் வித்வான் எம். சந்திரசேகரன் உள்ளிட்ட மேதைகளுக்கு முரளி நாத லஹிரி விருது வழங்கி கெளரவிப்பு!

கர்நாடக இசைமேத டாக்டர். எம்.பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் 92-வது பிறந்த நாள் ஜூலை 6-ம் தேதியன்று விருது வழங்கும் நிகழ்ச்சியாகவும் இசை நிகழ்ச்சியாகவும் சிறப்பாக நடைபெற்றது.

டாக்டர் பால முரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன் பாரதிய வித்யா பவன் மற்றும் எஸ் எஸ் வி எம் இஸ்டிடியூஷன்ஸ் (ssvm institutions) இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியின் தொடக்கமாக பால முரளி கிருஷ்ணா அவர்களின் பிரதான சீடர்களான டாக்டர் . கே. கிருஷ்ணகுமார் மற்றும் திருமதி.பின்னி கிருஷ்ணகுமார் அவர்களின் குழு பால முரளி பஞ்ச ரத்ன கீர்த்தனைகளைப் பாடி துவக்கி வைத்தனர்.கர்நாடக இசை உலகின் உச்சத்தை தொட்ட இசை கலைஞர்ககள் டாக்டர் .டி.கே. மூர்த்தி (மிருதங்கம்), திரு.எம். சந்திரசேகரன் ( வயலின்) மற்றும் திரு. விக்கு விநாயக ராம் (கடம்) அவர்களுக்கு முறையே 2020, 2021 மற்றும் 2022 வருடங்களுக்கான ‘முரளி நாத லஹிரி’ விருதுகள் மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் காசோலை டாக்டர் .எம். பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை சார்பாக டாக்டர். வம்சி மோஹன் டாக்டர் . சுதாகர் ஆகியோர் வழங்கினார்கள்.நிகழ்ச்சியில் கர்நாடக இசையுலகின் பல்கலை வித்தகர் டாக்டர் .டி.வி. கோபால கிருஷ்ணன் மற்றும் பாரதிய வித்யா பவன் இயக்குனர் திரு கே.என்.ராமசாமி அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெற்று டாக்டர்.பாலமுரளி கிருஷ்ணா அவர்களுடனான நினைவுகளையும் அவரின் சிறப்புகளையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வின் நிறைவாக பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை சார்பாக டாக்டர்.கே.கிருஷ்ணகுமார் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here