விஜய் ஆண்டனி நடிப்பில், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி, விரைவில் ரிலீஸாகவிருக்கிற படம் ‘மழை பிடிக்காத மனிதன்.’
இந்த படத்தில் நடித்துள்ள கன்னட நடிகர் பிருத்வி அம்பருக்காக நடிகர் நகுல் தமிழில் குரல் கொடுத்துள்ளார்.
தமிழ் திரையில் நடிகராக மட்மில்லாமல், பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பின்னணிப் பாடகராகப் பணியாற்றி கவனத்தை ஈர்த்தவர். பல்வேறு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கூட்டத்தின் பணியாற்றி அனைவரது கவனத்தையும் கவர்ந்தவர். இப்போது டப்பிங் கலைஞராகவும் புதிய பாத்திரத்தை ஏற்றுள்ளார்.
விஜய் மில்டன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாகவும், மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும், சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். மேலும், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர், ப்ரணிதி மற்றும் இயக்குனர் ரமணா ஆகியோர் நட்சத்திர பட்டாளத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.