உழைப்பாளர்களுக்கு சாதி, மதம், மொழி, இனம் எதுவும் கிடையாது என்ற கருத்தை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம்! -‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது. தற்போது ‘சென்ட்ரல்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது.

ஸ்ரீரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

காக்கா முட்டை விக்னேஷ் கதையின் நாயகனாக நடிக்க, கதையின் நாயகியாக சோனேஸ்வரியும் இயக்குநர் பேரரசு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சித்தா தர்ஷன், ஆறு பாலா, மேதகு ராஜா, அன்பு ராணி, கவிநிலவன், ஓம் கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ள பாரதி சிவலிங்கம் படம் பற்றி பேசியபோது, ”இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம். உழைப்பாளர்களுக்கு சாதி, மதம், மொழி, இனம் எதுவும் கிடையாது அனைவரும் ஒன்றுதான் என்ற கருத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

உலகம் வளர்ச்சி அடைய தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இன்று வரை நாம் பயன்படுத்தும் அனைத்தும் உழைப்பாளர்களால் கிடைத் தவைதான் அவர்கள் இல்லாது இந்த முன்னேற்றங்கள் சாத்தியமில்லை ஆனால் அப்பேர்பட்ட உழைப்பாளிகள் முதலாளித்துவம் என்ற பெயரில் எப்படியான இன்னல்களை சந்திக்கின்றனர் என்பதையும் சொல்கிறேன்.

அப்படி ஒரு குக்கிராமத்திலிருந்து குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னை சென்ட்ரலுக்கு வேலைக்கு வரும் நாயகன், முதலாளித்துவம் என்ற பெயரால் என்ன மாதிரியான கஷ்டங்களை அனுபவிக்கிறான் அதிலிருந்து எப்படி மீண்டு வந்தான் என்பதை உணர்ச்சிபூர்வமாக சொல்லியிருக்கிறோம் என்றார் இயக்குனர் பாரதி சிவலிங்கம்.

சென்ட்ரல் ரயில் நிலையம் எப்படி அனைவராலும் மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறதோ ,அதேபோல் இந்த படமும் மக்கள் மனதில் இருந்து நீங்காத இடம் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விரைவில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா பிரமாண்டாமாக நடைபெற உள்ளது. டிரெய்லர் வெளியானதும் அனைவரும் எதிர்பார்க்கக் கூடிய படமாக மாறிவிடும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here