ராதா மோகன் இயக்கத்தில், அதிரடியான காமெடி சரவெடி ஜானரில் உருவாகியுள்ள சீரிஸ் ‘சட்னி – சாம்பார்.’ யோகிபாபுவின் நடிக்கும் இந்த முதல் வெப் சீரிஸ் ஜூலை 26-ம் தேதியிலிருந்து ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் சீரிஸின் முதல் இரண்டு எபிஸோடுகள், பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது. அதையடுத்து வெப் சீரிஸ் குழுவினர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.
நிகழ்வில் இயக்குநர் ராதா மோகன் பேசியபோது திரைத்துறையில் 20 ஆண்டுகளைக் கடந்து இருக்கிறேன் என்கிறார்கள், 20 ஆண்டுகளைக் கடந்து இங்கு நிற்கிறேன் என்றால், அதற்கு நீங்கள் தந்த ஆதரவு தான் காரணம், பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். இந்த சீரிஸில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடித்திருக்கும் முதல் சீரிஸ், எங்களுக்காக அவர் மிக பிஸியான நேரத்தில் பத்து நாட்கள் கால்ஷீட் தந்தார், எல்லோரும் உங்களுக்கு பத்து நாள் கால்ஷீட் தந்தாரா? என ஆச்சரியப்பட்டார்கள். அவர் தந்த ஒத்துழைப்பிற்கு நன்றிகள்.
இந்த நேரத்தில் ஓடிடிக்கு என்னை அணுகிய செந்தில், கிருஷ்ணன் குட்டி, பிரதீப், ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நடிகர்கள் அனைவரும் இங்கே இருக்கிறார்கள், எல்லோரும் மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்தார்கள். அனைவருக்கும் என்னுடைய நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். என்னுடைய உதவி இயக்குநர் குழுவிற்கு, என்றும் நான் நன்றி சொன்னதே இல்லை, அவர்கள் இல்லாமல் நான் இல்லை, அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இந்த சீரிஸ் என்னுடைய மற்ற படைப்புகள் போல உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி’ என்றார்.
வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அஸ்வின், ஒளிப்பதிவாளர் பிரசன்னா, இசையமைப்பாளர் அஜீஸ் அசோக், நடிகர் இளங்கோ குமரவேல் , நடிகர் நிதின் சத்யா, நடிகர் கயல் சந்திரன், நடிகை சம்யுக்தா, நடிகை நந்தினி, நடிகை மீரா கிருஷ்ணன், நடிகை வாணி போஜன், ஹாட்ஸ்டார் சார்பில் பிரதீப் மில்ராய், கலை இயக்குநர் கதிர், எழுத்தாளர் பொன் பார்த்திபன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.
சட்னி சாம்பார் ஜாலியான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.
யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த சீரிஸில் காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆர்.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குநர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய அஜீஸ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார்.
இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன், இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார். கலை இயக்கம் கே கதிர் மற்றும் எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.