தெலுங்கு மொழியில் வெங்கட்பிரபு இயக்கும் முதல் படத்தில் நாகசைதன்யா ஹீரோவாக நடிக்கிறார்.
தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிற வகையில் நாக சைதன்யாவுக்கு இது முதல் பைலிங்குவல் திரைப்படம்.
‘வாரியர்’ படம் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த, இளைஞர்களுக்கு பிடித்த கதாநாயகி கீர்த்தி ஷெட்டி, இந்தப் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடி!
இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர்.
இப்படி பல எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிற, ‘NC22’ என பெயரிடப்பட்டிருக்கிற இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்குகிறது!
இதனை படக்குழு, ”அக்கினேனி நாகேஸ்வர ராவ் அவர்களின் ஆசியுடன் எங்களின் முக்கிய படைப்பான இந்த படம் தொடங்குகிறது” என படத்தின் புதிய போஸ்டருடன் அறிவித்திருக்கிறார்கள்.
அந்த போஸ்டரில் நாகசைதன்யாவின் படம் தொடர்பான எந்தவொரு லுக்கும் வெளியாகவில்லை. நாகசைதன்யா நின்று கொண்டிருக்கும்படி அவரது நிழல் உருவம் இருக்க, அவரை நோக்கி பல ரெட் டார்கெட்டுகள் இருக்கும்படி கருப்பு – சிவப்பு வண்ணத்தில் வைப்ரண்ட்டாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். பிரபலமான பல நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர்.
படக் குழு:-
கதை, திரைக்கதை, இயக்கம்: வெங்கட்பிரபு
வசனம்: அபூரி ரவி
தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசா சித்தூரி,
தயாரிப்பு நிறுவனம்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்
வழங்குபவர்: பவன்குமார்