இசையமைப்பு, டப்பிங்… விறுவிறுப்படைந்த ‘சந்திரமுகி 2’ படத்தின் பணிகள்!

ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘சந்திரமுகி 2.’ இந்த படத்தை பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பி. வாசு இயக்கத்தில் 65-வது படமாக தயாராகி வரும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஹாரர் வித் காமெடி ஜானரில் இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள்  முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ராகவா லாரன்ஸ் பின்னணி பேசி, தன் பங்களிப்பினை நிறைவு செய்திருக்கிறார். பின்னணி இசை கோர்க்கும் பணியை ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி, எதிர்வரும் 22-ம் தேதி தொடங்குகிறார் என்றும், இப்படத்தின் இசை வெளியீடு மிகப் பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இப்படத்தில் இடம்பெறும் சிங்கிள் ட்ராக்கினை அடுத்த மாதம் வெளியிடவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனித்திருக்கிறார்.

படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here