புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி ‘இனியவை இன்று.’
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களை, நம் வீட்டின் அஞ்சறைப்பெட்டியில் இருக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு குணப்படுத்தி, ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகளை எடுத்துச் சொல்வதே நிகழ்ச்சியின் நோக்கம்.
நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் உஷா நந்தினி மற்றும் மருத்துவர் ஜெயரூபா இருவரும் கலந்து கொண்டு ஆரோக்கிய குறிப்புகளை எடுத்துச் சொல்லி வழி காட்டுகின்றனர்.