டிராகன்’ மூலம் பிரபலமான டிஜிட்டல் திரை நட்சத்திரம் வி ஜே சித்து இயக்கி நடிக்கும் ‘டயங்கரம்’ உற்சாகமாக துவங்கியது!

‘டிராகன்’ படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான வி ஜே சித்து கதையின் நாயகனாக நடித்து, இயக்கும் ‘டயங்கரம்’ படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் தமிழ் திரையுலகத்தை சார்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.‌

சமகால இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார்.

‘இந்த படம் இன்றைய இளைஞர்களின் துடிப்பான ஆற்றலை மையப்படுத்திய படமாக இருக்கும் என்றும், காமெடி, எமோசன் மற்றும் சுய அடையாளத்தை கண்டுபிடித்தல் உள்ளிட்ட இளைஞர்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படைப்பாக ‘டயங்கரம் ‘ இருக்கும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌

இந்த படத்தில் வி ஜே சித்து, நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான் , ‘ஆதித்யா’ கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ வீடியோ – இணையத்தில் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here