ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம் செண்பகமூர்த்திக்கு இன்று பிறந்த நாள். அதையடுத்து அவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.
பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் விஷ்ணு விஷால், திரைப்பட விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் உள்ளிட்ட பல விநியோகஸ்தர்கள், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

